ரேஷன் கடையில் மளிகைப் பொருளை வாங்க வற்புறுத்தலாமா?.. கொந்தளிக்கும் நுகர்வோர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ரேஷன் கடைகளில் விற்கப்படும் மளிகைப் பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க வைக்கக் கூடாது என்று நுகர்வோர் கொந்தளிக்கின்றனர்.

தமிழகத்தில் இயங்கும் ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில், மண்ணெய்ணெய் உள்ளிட்டவை கட்டுப்பாட்டுப் பிரிவின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது, இவற்றை ஏழை மக்கள் வாங்கிச் சென்று பயன்படுத்தி வருகின்றனர். அதே சமயம் கட்டுப்பாடற்ற பிரிவில் மளிகைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.

அதாவது டீதூள், மஞ்சள் தூள், ரசப்பொடி, உப்பு உள்ளிட்டவையும் விற்கப்படுகின்றன. கூட்டுறவு சங்கங்கள் தயாரிக்கும் இந்த பொருட்கள் விருப்பத்தின் பேரில் மக்கள் வாங்கிச் செல்வதற்காக அறிமுகம் செய்யப்பட்டது.

தரமற்ற சாமான்கள்

தரமற்ற சாமான்கள்

ஆனால் அவை தரமற்றதாக இருப்பதால் மக்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. எனினும் அதிகாரிகள் நெருக்கடியால் ஊழியர்கள் அவற்றை நுகர்வோரிடம் வற்புறுத்தி விற்கின்றனர்.

சுற்றறிக்கை அனுப்பியும்

சுற்றறிக்கை அனுப்பியும்

இந்நிலையில் ரேஷன் கடைகளில் கூட்டுறவு சங்கங்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்யுமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுத் துறையி உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்த சுற்றறிக்கை இணை பதிவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நிர்பப்படுத்தக் கூடாது

நிர்பப்படுத்தக் கூடாது

இதனிடையே ஒரு பொருளை வாங்க வேண்டுமா வேண்டாமா என்பதை அதிகாரிகள் தீர்மானிக்கக் கூடாது. நுகர்வோர் விருப்பப்பட்டால் மட்டுமே அவற்றை வாங்க முடியும் ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு கெடுபிடி காட்டுவது ஏற்புடையதல்ல என்று நுகர்வோர் கொந்தளிக்கின்றனர்.

Ration Shop Siege By People | ரேஷன் கடையை முற்றுகையிட மக்கள் - Oneindia Tamil
எங்கே கேட்கிறார்கள்

எங்கே கேட்கிறார்கள்

ஆனால் எல்லா ரேஷன் கடைகளிலும் அதை வாங்கு இதை வாங்கு என்று நிர்ப்பந்திக்கும் ஊழியர்களைத்தான் மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது. முடியாது என்றால் வாக்குவாதம்தான் வெடிக்கிறது.

ஒட்டுமொத்தமாக மாற்றம் வர வேண்டும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Consumers of Ration shops Complaining that ration shop officers insisting them to buy co operative society preparing product which we don't like it.
Please Wait while comments are loading...