வீடு புகுந்து திருடி வந்த நெல்லிக்குப்பம் பாஜக நகர செயலாளர்.. சிக்க வைத்த சிசிடிவி.. அதிரடி கைது
கைதான அறிவழகன் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பாஜக நகர செயலாளராக உள்ளார்.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்து டிமிக்கி கொடுத்த வந்த பாஜக நகர செயலாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருட்டு நடந்த இடத்தில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார் அவரை தற்போது கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து திருட்டு நடந்து வந்தது. தங்க சங்கிலி பறிப்பு, வீடுகளில் புகுந்து மர்மநபர்கள் கைவரிசை காட்டி வந்தனர்.
இதுதொடர்பான புகார்கள் போலீஸ் நிலையங்களில் பதிவாகி வந்தன. இது போலீசாருக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. திருட்டில் ஈடுபட்ட நபர்களை கண்டறிய போலீசார் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வந்தனர்.

சிசிடிவி ஆய்வு
இதன் ஒருபகுதியாக குற்றங்கள் நடந்த பகுதிகளில் பதிவாகி இருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது திருக்கோவிலூர் வள்ளலார் வீதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்த சங்கிலி பறிப்பு வழக்கில் தொடர்புடைய நபரின் உருவம் அங்கு பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

பாஜக நிர்வாகி கைது
இதையடுத்து போலீசார் அந்த நபர் பற்றி விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் முள்ளிகராம்பட்டு கிராமத்தை சேர்ந்த அறிவழகன் என்பதும், அவர் நெல்லிக்குப்பம் பாஜக நகர செயலாளராக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்த அறிவழகனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

திருட்டு
இவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது அவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அதோடு திருக்கோவிலூர் பகுதியில் மட்டும் 4 இடங்களில் அவர் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதையடுத்து அறிவழகனிடம் இருந்து 3 பவுன் தங்க நகைகள், ஒரு மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

குடிப்பழக்கத்தால்...
மேலும் இவருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர் திருட்டில் ஈடுபட்டு கிடைக்கும் பொருட்களை விற்பனை செய்து பணம் பெற்று மதுபானம் குடித்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரை நடைபெற்று வருகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications