For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பங்க்குகளின் அறிவிப்பால் குறைந்த ரூபாய்க்கு பெட்ரோல் போடுபவர்கள் அதிர்ச்சி

பெட்ரோல் பங்க்குகள் இன்று நள்ளிரவு முதல் கார்டுகள் மூலம் பெட்ரோல் டீசல் போட முடியாது என தெரிவித்துள்ளன. இதனால் குறைந்த ரூபாயக்கு பெட்ரோல் டீசல் போடும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: பெட்ரோல் பங்க்கள் இன்று நள்ளிரவு முதல் டெபிட் மற்றும கிரெடிட் கார்டுகளை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளன. இதனால் 200, 400 என குறைந்த ரூபாய்க்கு பெட்ரோல் போடும் வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். அன்று முதல் நாடு முழுவதும் பெரும் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

customers shocked for the announcement of Petrol bunks

மோடி அரசு பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் கார்டு முலம் பெட்ரோல் நிறுவனங்கள் செய்யும் பரிவர்தனைக்கு வங்கிகள் கூடுதலாக 1% வரி வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளன.

இதனால் இழப்பு ஏற்படும் என அறிவித்த பெட்ரோல் பங்க் உரிமையார்கள் இன்று நள்ளிரவு முதல் டெபிட் கிரெடிட் கார்டுகளை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளனர். இனி பணத்துக்கு மட்டுமே பெட்ரோல் டீசல் போடப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதனால் 200, 400 என குறைந்த விலைக்கு பெட்ரோல் போடும் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரு பக்கம் அரசு பணப்பரிவர்த்தனைக்கு தடைவிதித்து வரும் நிலையில் பெட்ரோல் பங்க்கள் பணப்பரிவர்த்தனையை மட்டுமே அனுமதிக்கப்படும் என தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் என்னென்ன கொடுமைகளை எல்லாம் நாம் சந்திக்க வேண்டுமோ என்று மக்கள் வாய் விட்டும் அழும் நிலைக்குப் போய்க் கொண்டுள்ளது நிலை.

English summary
Petrol bunks announce that they will not accept debit and credit cards from today midnight. customers are shocked who are all filling petrol for lower cost.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X