சென்னை மழை எதிரொலி... பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
கனமழையால் மூழ்கியது மெரினா கடற்கரை- வீடியோ

சென்னை: சென்னையில் நேற்று மாலையில் இருந்து கொடூரமாக மழை பெய்து வரும் சூழ்நிலையில் மழை காரணமாக ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. இதுவரை சென்னையில் மழை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் செங்கல்பட்டில் தற்போது இடிந்து விழுந்து இருக்கும் இரண்டு மாடி கட்டிடத்தால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

சென்னையில் நேற்றில் இருந்து மிகவும் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்யும் மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. சென்னையின் 70 சதவிகிதமான இடங்களில் உயரமாக நீர் நிரம்பி இருக்கிறது. கடந்த 8 மணி நேரமாக சென்னையின் அனைத்து பகுதியிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

Death rate increases due to heavy rain in Tamilnadu

இந்த நிலையில் சென்னையை ஒரே இரவில் அடியோடு புரட்டிப் போட்ட இந்த பேய் மழை காரணமாக பல இடைகளில் திடீர் மரங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. இதுவரை கணக்கு படி 5 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக சென்னையில் மழையினால் எத்தனை பேர் உயிரிழந்து இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

நேற்று தி நகரில் பெய்த கன மழையில் இடி விழுந்த அதிர்ச்சியில் ஒருவர் மரணம் அடைந்து இருக்கிறார். பிரசாந்த் என்ற இந்த நபர் நேற்று கிரியப்பா சாலையில் இடிவிழுந்த போது அந்த அதிர்ச்சி தாங்காமல் மரணம் அடைந்து இருக்கிறார்.

அதேபோல் தொடர்மழை காரணமாக சென்னையின் ஓட்டேரியில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . அப்போது சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த சாந்தா என்ற பாட்டி மழை நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

சென்னை கொடுங்கையூர் ஆர் ஆர் நகரைச் சேர்ந்த 5 சிறுமிகள் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பாவனா என்ற 10 வயது சிறுமியும் யுவஸ்ரீ என்ற 8 வயது சிறுமியும் மின் இணைப்பு பெட்டியில் இருந்து அறுந்து தொங்கிய மின்கம்பியை தவறுதலாக மிதித்தனர். இதில் 2 சிறுமிகளும் படுகாயமடைந்தனர்.

மேலும் செங்கல்பட்டில் தற்போது இடிந்து விழுந்து இருக்கும் இரண்டு மாடி கட்டிடத்தால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கட்டிடத்தில் பலர் மாட்டி இருக்கலாம் என்றும் , மழைக்கு அங்கு தஞ்சம் அடைந்து இருக்கலாமா என்றும் கூறப்படுகிறது. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த கட்டிடம் 20 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஆகும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chennai and otherparts of Tamilnadu has affected by rain worstly. Death rate increases due to heavy rain in Tamilnadu
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற