போயஸ் கார்டனைத் தாக்கிய தீபா புயல்.. பயங்கர ஷாக்கில் அதிமுக!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டுக்கு தீபாவும் அவரது சகோதரரும் சொந்தம் கொண்டாடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போயஸ் கார்டனுக்கு வந்த தீபாவை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா போயஸ்கார்டனுக்கு திடீர் வருகை தந்துள்ளார். அத்தையின் வீடு தனக்கே சொந்தம் எனக்கூறி ஆதரவாளர்களுடன் வந்துள்ளார் தீபா.

இதனால் போயஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போயஸ் தோட்ட இல்லில் தமக்கும் பங்கு உண்டு என கூறி வீட்டினுள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தடுக்கப்பட்ட தீபா

தடுக்கப்பட்ட தீபா

தீபாவை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். தீபாவின் கணவர் மாதவனும் போயஸ் கார்டனுக்கு வந்துள்ளார்.

போலீசாருடன் வாக்குவாதம்

போலீசாருடன் வாக்குவாதம்

ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். தீபாவின் ஆதரவாளர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

செய்தியாளர்கள் மீதும் தாக்குதல்

செய்தியாளர்கள் மீதும் தாக்குதல்

செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களையும் பணி செய்ய விடாமல் தடுத்த போலீசார், அவர்கள் தாக்கினர். இதனால் செய்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டமிட்ட தீபக்

திட்டமிட்ட தீபக்

சகோதரர் தீபக் அழைத்ததாலேயே போயஸ் கார்டனுக்கு சென்றதாக கூறிய தீபா, தன்னை திட்டமிட்டு வரவழைத்து தாக்கியதாக தெரிவித்தார். உயிர் பயத்திலேயே கணவன் மாதவனை அழைத்ததாகவும் தீபா தெரிவித்தார்.

அரசியல் பரபரப்பு

அரசியல் பரபரப்பு

தீபக் தன்னை கொல்ல முயற்சித்தாகவும் அவர் கூறினார். போயஸ் கார்டனில் அரங்கேறிய இந்த சம்பவங்களால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Deepa comes to Poes garden. She is telling that her aunty property is for her. Policw not allowing her to the house.
Please Wait while comments are loading...