For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு... பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சிவகங்கை: டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் அளிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில்
வெள்ளிகிழமை காரைக்குடி நகராட்சி, காரைக்குடி முத்துப்பட்டிணம் ஆரம்ப சுகாதார
மையம் மற்றும் இராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளி ரோட்டரி இன்டராக்ட் சங்கம் இணைந்து
டெங்கு காய்ச்சல் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

அதற்கு முத்துப்பட்டிணம் ஆரம்ப சுகாதார மையத்தின் டாக்டர் திருமதி.அனிதா அவர்கள் தலைமை தங்கினார்கள். முன்னதாகபள்ளி தலையாசிரியர்திரு. ஆ.பீட்டர்ராஜாஅவர்கள் அனைவரையும் வரவேற்றார்கள்.

நீர் தேங்காமல் பாதுகாப்போம்

நீர் தேங்காமல் பாதுகாப்போம்

இந்நிகழ்ச்சியில் டாக்டர். அனிதா பேசுகையில், டெங்கு காய்ச்சல் உண்டு பண்ணக்கூடிய ஏடிஸ் வைரஸ்,கொசுக்கள் மூலம்தான் பரவுகிறது என்றார். இவ்வகை கொசு நன்னீரில் மட்டுமே உற்பத்தி ஆக கூடியது. எனவே வீட்டின் சுற்றுபுறத்திலும், பள்ளியின்சுற்றுபுறத்திலும் உள்ள மழைநீர் தேங்கும் அளவில் உள்ள பிளாஸ்டிக் டப்பாக்கள், பாட்டில் மூடிகள், பாலிதீன் பைகள்,கொட்டடாங்குச்சிகள்ஆகியவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று கூறினார்கள்.

டெங்கு காய்ச்சல் கவனம்

டெங்கு காய்ச்சல் கவனம்

மேலும் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளையும் விளக்கமாக கூறினார் இவ்வகை காய்ச்சலால் உடலில் இரத்தக்கசிவுஏற்பட்டுநமது உடலில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும் என்றும், டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால், காய்ச்சல் குறைந்தாலும் 15நாட்களுக்குநாம் கவனமாக இருக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல் உறுதிமொழி

டெங்கு காய்ச்சல் உறுதிமொழி

சிலசமயம் இவ்வகை வைரஸ் உடலில் அழியாமல் இருந்து மேலும் டெங்கு காய்ச்சலை அதிகப்படுத்தும் என்றும் மருத்துவர்கள் கூறினார்கள் அன்றைய தினமே டெங்கு காய்ச்சல் ஒழிப்பு உறுதிமொழியானது மாணவர்கள் அனைவராலும் எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்கள் அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது.

ஆர்வமுடன் பங்கேற்பு

ஆர்வமுடன் பங்கேற்பு

நிகழ்ச்சியில் இராமநாதன் செட்டியார் பள்ளியின் ரோட்டரி இன்டராக்ட்சங்கத்தின்தலைவர் செல்வன் ஆரோக்கிய கிறிஸ்டோபர், செயலர் கிலன் பொருளாளர் சண்முகேஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் உடனிருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் பட்டதாரி ஆசிரியர் சரவணன்அவர்கள்நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் விஜயகாந்தி அவர்கள் செய்திருந்தார்.

English summary
Karaikudi Ramanathan chettiyar School students was observed on october 6th, First anti-dengue day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X