ஆட்கொல்லி டெங்கு.. அ முதல் ஃ வரை.. எல்லாத் தகவலும் "ஆப்"பில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : டெங்கு காய்ச்சல் குறித்த சந்தேகங்களையும், கொசுவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கூகுள் பிளே ஸ்டோரில் டெங்கு பீவர் தமிழ் என்ற செயலியில் கிடைக்கிறது.

தமிழக மக்களை அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் அனைத்து ஊடங்கள் வாயிலாகவும் முன்எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக சுகாதாரத்துறை டெங்கு காய்ச்சல் குறித்த அனைத்து விவரங்களை அறிந்து கொள்ள தனிச் செயலியை உருவாக்கியுள்ளது.

ஸ்மார்ட் ஃபோன் பயன்பாட்டாளர்களுக்கு பெரிதும் உதவும் வகையில் இந்த செயலி உள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து Dengue fever tamil என டைப் செய்து இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலிலிய்ல டெங்கு கொசு உற்கத்தியாகும் இடங்கள், டெங்கு நோய் குறித்த கேள்வி பதில் என மக்களின் அச்சங்களுக்கு விடை காணப்படுகிறது.

முக்கியத் தகவல்கள்

முக்கியத் தகவல்கள்

இதே போன்று டெங்குவை கட்டுப்படுத்த உதவும் சித்த மருத்துவ முறைகள் இதில் இடம்பெற்றுள்ளன. இதே போன்று அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் என்று அனைத்து விவரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

குறும்படங்கள் வடிவில்

குறும்படங்கள் வடிவில்

இந்த செயலியில் டெங்குகாய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் கொசுக்கள் வளர ஏதுவான இடங்கள் படத்துடன் விளக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபலங்கள் பேசிய குறும்படங்களும் இந்த செயலியில் இணைக்கப்பட்டுள்ளது.

எளிய முறையில் தகவல்கள்

எளிய முறையில் தகவல்கள்

டெங்கு குறித்த கூடுதல் தகவல்களுக்கும் அவசர உதவிக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய 104, 108 மற்றும் பொது சுகாதாரத்துறையின் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் செயலியில் இருந்தே இந்த எண்ணை தொடர்புகொள்ளும் விதமாக செயலி எளிதாக அமைக்கப்பட்டுள்ளது.

எத்தனை பேர்?

எத்தனை பேர்?

இந்த செயலியை பதிவிறக்கம் செய்தவர்கள் இது மிகவும் பயனளிக்கும் தகவல்களை அளிப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுவரை ஆயிரம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Google play store offers Dengue fever tamil app which contains all the details of how to control dengue and what are the emergency numbers.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற