For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாங்க ராசாத்திகளா: சிந்து, சாக்ஷிக்கு ரூ.6 லட்சம் வைர நெக்லஸ் அளிக்கும் என்.ஏ.சி.

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: முன்னணி நகை கடையான என்.ஏ.சி. ஜுவல்லர்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற சாதனையாளர்கள் சிந்து, சாக்ஷி மாலிக் மற்றும் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் ஆகியோருக்கு வைர நெக்லஸ் வழங்குகிறது.

இது குறித்து என்.ஏ.சி. ஜுவல்லர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற சிந்துவுக்கு ரூ. 6 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸும், வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கிற்கு ரூ. 3 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸும், ஜிம்னாஸ்டிக் பிரிவில் அசத்திய தீபா கர்மாகருக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸும் அளித்து கவுரவப்படுத்தப்படும். வளர்ந்து வரும் விளையாட்டு வீராங்கனைகளை ஊக்குவிக்க என்.ஏ.சி. ஜுவல்லர்ஸ் முடிவு செய்துள்ளது.

Diamond necklaces for Rio Olympics medallists PV Sindhu and Sakshi Malik

ரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனர். இளம் வீராங்கனைகள் நம் நாட்டிற்கு பெருமை தேடித் தந்ததை பார்க்கவே பெருமையாக உள்ளது. அத்தகைய வீராங்கனைகளை கவுரவிப்பதில் த்ரில்லாக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Leading jewellery chain NAC Jewellers on Tuesday decided to shower diamonds on Olympic medal winning shuttler P.V. Sindhu and wrestler Sakshi Malik as well as gymnast Dipa Karmakar for their great performance at the recently-concluded Rio Olympic games.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X