அதிமுகவுக்கு ஆப்பு... நீக்கப்பட்ட நிர்வாகிகளுக்காக தனி பேரவை தொடங்குகிறார் தினகரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவிலிருந்து ஈபிஎஸ்- ஓபிஎஸ்யால் கூண்டோடு நீக்கப்பட்டு வரும் நிர்வாகிகளுக்கு உயர் பதவி கொடுப்பதற்காக டிடிவி தினகரன் தனிபேரவையை தொடங்குகிறார்.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி குறித்து ஆராய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது அதிமுகவிலிருந்து 100-க்கும் மேற்பட்டோர் நீக்கப்பட்டு விட்டன. இதுகுறித்த அதிரடி அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

Dinakaran is going to start Peravai

இவர்களெல்லாம் தினகரன் ஆதரவாளர்கள். இந்நிலையில் நீக்கப்பட்ட அதிமுக நிர்வாகிகளுக்காக தனி பேரவை ஒன்றை தொடங்க தினகரன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக தனி அலுவலகம் ஒன்றை தொடங்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உறுப்பினர் சேர்க்கைக்காக படிவங்கள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அம்மா பேரவை என ஜெயலலிதா தொடங்கியபோது, மாவட்ட பொறுப்பு வாங்க பலரும் போட்டி போட்டனர். அந்த பொறுப்பாளர்களுக்குதான் எம்எல்ஏ தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்பது காரணம்.

அதேபோல இதையும் பயன்படுத்த தினகரன் புத்திசாலித்தனமாக முயன்று வருகிறார். இதனால் அடுத்த முறை தேர்தலில் சீட் வாங்க எடப்பாடி அணியிலிருந்து பிச்சி கிட்டு ஓடி வருவர் என்பதும் தினகரனின் பிளானாக இருக்கலாம் என்று தெரிகிறது.

ஸ்லீப்பர் செல்களின் உதவியுடன் இன்னும் சில மாதங்களில் எடப்பாடி ஆட்சியை கவிழ்த்துவிட்டு தினகரன் முதல்வராக பதவியேற்பார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
RK Nagar MLA Dinakaran is going to start Peravai and also he is planning to give high post for ADMK activist who were sacked by OPS-EPS team.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற