மன்னார்குடியில் வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த திவாகரன் ஆதரவாளர்கள் கைது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சை: மன்னார்குடியில் வருமான வரித்துறையை தடுத்த திவாகரன் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீதும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Diwakaran supporters has been arrested in Mannarkudi

மன்னார்குடியில் உள்ள திவாகரனின் கல்லூரியில் இருந்து ரோலக்ஸ் வாட்ச் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திவாகரன் வீட்டில் இருந்து 25 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்லூரிக்கு சோதனை செய்ய வந்த அதிகாரிகளுடன் திவாகரனின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளின் வாகனங்களையும் அவர்கள் தடுத்து நிறுத்தினர்.

மேலும் அதிகாரிகளின் கார் மற்றும் பைகளை திவாகரனின் ஆதரவாளர்கள் சோதனை செய்தனர். இதைத்தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Diwakaran supporters opposing Income tax raid in his college. Diwakaran supporters has been arrested in Mannarkudi.
Please Wait while comments are loading...