காரைக்குடி நகராட்சிப் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்.. இனிப்புகள் வழங்கி உற்சாகம்

காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளியில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

Subscribe to Oneindia Tamil

காரைக்குடி: ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நேற்று தீபாவளி திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் பீட்டர் ராஜா தலைமையேற்றார்.

Diwali festival celebrated in Karaikudi Ramanadhan Chettiyar high school

பட்டதாரி ஆசிரியர் கோமதிஜெயம் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். தலைமையாசிரியர் மாணவர்கள் , இத்திருநாளில் தீய எண்ணங்களை விடுத்து, நல்ல எண்ணங்களை வளர்த்து கொண்டு, வாழ்வில் மேன்மை அடைய வேண்டும் என்று வாழ்த்துக் கூறினார்.

Diwali festival celebrated in Karaikudi Ramanadhan Chettiyar high school

மேலும் மாணவர்கள் இத்தீபாவளி திருநாளில் பட்டாசுகளை தவிர்த்து, மாசற்ற சுற்றுச்சுழலை உருவாக்க வேண்டும் என்றார். பட்டதாரி ஆசிரியர் அனுராதா தீபாவளி பண்டிகை கொண்டாடுவதன் நோக்கம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.

Diwali festival celebrated in Karaikudi Ramanadhan Chettiyar high school

இவ்விழாவையொட்டி பள்ளி மாணவர்கள் ,பள்ளி வளாகத்தில் SAVE ENVIRONMENT, NO CRACKERS என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு வண்ணக்கோலமிட்டும், தீபங்கள் ஏற்றியும் மகிழ்ந்தனர். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு இனிப்புகள் வழங்கியும், வாழ்த்து அட்டை வழங்கியும் தீபாவளி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.

பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி நன்றியுரையாற்றினார். பட்டதாரி ஆசிரியர் முத்துவேல்ராஜன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+