20 சீட்+ 2 ராஜ்ய சபா.. திமுக, அதிமுகவிடம் டிமாண்ட் வைத்த தேமுதிக.. ஸ்டாலின் கொடுத்த பதில்!
சென்னை: சட்டசபைத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளிடமும் தங்களின் டிமாண்ட் என்னவென்பதை தேமுதிக கூறி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை ஜனவரியில் நடக்கும் தேமுதிக மாநாட்டில் கூறவுள்ள பிரேமலதா விஜயகாந்த், இம்முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பதாக தெரிகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதேபோல் சிறிய கட்சிகளை தங்களின் கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில் இரு பெரிய கட்சிகளும் தீவிரமாக இருக்கின்றன. அந்த வகையில் தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.

2 மாதங்களுக்கு முன்பாக திமுக கூட்டணி பிரேமலதா விஜயகாந்த் பக்கம் செல்வார் என்று கூறப்பட்ட போது, திடீரென அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான கேசி வீரமணி சந்தித்தார். அதன்பின் தேமுதிகவின் 3ஆம் கட்ட சுற்றுப்பயணம் மதுரையில் தொடங்கிய போது, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஆர்பி உதயகுமார் பிரேமலதாவை நேரில் சென்று சந்தித்துவிட்டு வந்தார்.
தேமுதிகவை பொறுத்தவரை வாக்கு சதவிகிதம் குறைவு என்றாலும், அந்தக் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் பூத் கமிட்டியை சரியாக செய்து முடிக்கும் அனுபவம் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலின் போது விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரனுக்கு கட்டமைப்பு ரீதியாக சிறப்பாக பணிகளை செய்து முடித்திருந்தது தேமுதிக. இதன் காரணமாக கடைசி வரை விஜய பிரபாகரன் போட்டி கொடுத்திருந்தார்.
தற்போது விஜய் களத்திற்கு வந்திருப்பதால், ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி முடிவாகும் என்று கருதப்படுகிறது. இதனால் எந்த சிறிய கட்சியின் ஆதரவையும் திமுக மற்றும் அதிமுக இழக்க தயாராக இல்லை. அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் நேரில் செல்கிறார்கள் என்றால், மறுபக்கம் கேஎன் நேரு தன்னுடைய ரூட்டில் பேசி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே அதிமுகவிடம் பிரேமலதா விஜயகாந்த் தனது டிமாண்டை கூறி இருக்கிறார். அதன்படி 20 தொகுதிகள் மற்றும் 2 ராஜ்ய சபா சீட் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இதனால் எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் ஆடிப் போயிருக்கிறார். ஏனென்றால் பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகளுக்கு அதிக தொகுதிகள் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகும்.
தற்போது தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் கொடுத்தால், சரியாக இருக்காது என்று எடப்பாடி பழனிசாமி கருதி இருக்கிறார். மறுபக்கம் திமுக தரப்பில் 8 அல்லது 9 தொகுதிகள் வரை ஒதுக்கலாம் என்று ஒரு ராஜ்ய சபா சீட் உறுதியாக கொடுக்கலாம் என்றும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரேமலதா விஜயகாந்த் என்ன முடிவு செய்யப் போகிறார் என்பது ஜனவரியில் தான் தெரிய வரும்.
-
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்!












Click it and Unblock the Notifications