ஸ்டாலினால் முதல்வராகவே முடியாது.... இதை சொல்வது யாருனு பாருங்க மக்களே!
மு.க.ஸ்டாலினை எனக்கு எப்போதும் பிடிக்காது, அவர் என்ன கருணாநிதியா என்று தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

சென்னை: ஸ்டாலினால் ஒரு போதும் முதல்வராக முடியாது. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அவர் என்ன கருணாநிதியா என்று தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
2011-ஆம் ஆண்டு திமுக என்ற மாபெரும் கட்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டது. இதில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில் 2016-ஆம் ஆண்டு வைகோ , திருமாவளவன் உள்ளிட்டோர் உள்ள மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தேமுதிக ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் திமுகவோ 89 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

காவிரி விவகாரம்
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடம், காவிரிக்கான அனைத்துக் கட்சி கூட்டம் உள்ளிட்டவை குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு விஜயகாந்த் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கருணாநிதி கூட்டியிருந்தால் நான் முதல் ஆளாக பங்கேற்றிருப்பேன்.

ஸ்டாலின் என்ன கருணாநிதியா?
ஆனால் திமுக சார்பில் கூட்டப்பட்ட அனைத்து கூட்டங்களும் மு.க.ஸ்டாலினை மையப்படுத்தியே இருந்தது. அதுபோன்ற கூட்டங்களில் நானும் பங்கேற்று ஸ்டாலினின் துதி பாட வேண்டுமா?, அதற்கு ஸ்டாலின் என்ன கருணாநிதியா?

40 கொடுக்க தயார்
2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று குறைந்தது 60 தொகுதிகள் வேண்டும் என நாங்கள் விரும்பினோம், ஆனால் திமுகவோ 40 தொகுதிகள் தர தயாராக இருந்தது. அதிகாரப் பகிர்வு என்ற நிபந்னைக்கு ஸ்டாலின் ஒப்புக் கொள்ளவில்லை. அது நடந்து இருந்தால் நானும் அவரும் அமைச்சர்களாக இருந்திருப்போம். இனி ஸ்டாலின் ஒரு போதும் முதல்வராக முடியாது.

திமுகவுக்கு நகைப்பு
தமிழகத்தில் பாஜக காலூன்ற வாய்ப்பே இல்லை என்றார் விஜயகாந்த். 2016-இல் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல், டெபாசிட் கூட வாங்காத தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் ஸ்டாலினை கிண்டல் செய்வது திமுகவினரிடையே நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications