For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை தி.மு.க. மா.செ.க்கள்:மேற்கு - ஜெ. அன்பழகன்;தெற்கு- மா.சு.;கிழக்கு-சேகர்பாபு;வடக்கு-சுதர்சனம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தி.மு.க.வின் சென்னை மாவட்ட செயலாளர் பதவிகளுக்கான தேர்தலில் ஜெ. அன்பழகன் உட்பட 4 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.

தி.மு.க.வில் 5 ஆண்டுகாலத்துக்கு ஒரு முறை உட்கட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் தி.மு.க.வின் மாவட்டங்கள் 65 ஆக பிரிக்கப்பட்டது. இந்த 65 மாவட்ட செயலாளர்கள் உட்பட அனைத்து நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

தி.மு.க. வரலாற்றில் முதல் முறையாக சென்னையில் 30 மாவட்ட செயலாளர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதுவரை மொத்தம் 65 மாவட்டங்களில் 56 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என 4 மாவட்டங்கள் உள்ளன. இந்த 4 மாவட்ட செயலாளர் பதவிக்கும் 9 பேர் மோதுகிறார்கள்.

DMK to announce Chennai district Secretaries on today

ஜெ.அன்பழகன், கு.க.செல்வம், மா.சுப்பிரமணியன், தனசேகரன், பி.கே.சேகர்பாபு, கே.பி.முனுசாமி, ஆர்.டி.சேகர், ப.ரங்கநாதன், சுதர்சனம் ஆகியோர் இடையே போட்டி நிலவியது. இந்தப் போட்டியை தவிர்க்க தி.மு.க. தலைமை சமரசப் பேச்சு நடத்தியும் தீர்வு காணப்படவில்லை.

இதனால் தேர்தல் மூலம் நிர்வாகிகளை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனால் சென்னை மாவட்ட செயலாளர் பதவிக்கு அறிவாலயத்தில் நேற்று மனுக்கள் பெறப்பட்டன. அதே நேரத்தில் போட்டியை தவிர்க்க தொடர்ந்தும் சமரசப் பேச்சு நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதனடிப்படையில் சென்னை வடக்கு மாவட்டத்திற்கு சுதர்சனம், சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு பி.கே.சேகர்பாபு, மேற்கு மாவட்டத்திற்கு ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்டத்திற்கு முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் இந்த 4 பேரும் இன்று போட்டியின்றி தேர்வாகினர்.

தி.மு.க. உள்கட்சி தேர்தலில், சென்னையில் உள்ள 4 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலை தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் இன்று வெளியிட்ட அறிக்கை:

சென்னை வடக்கு மா.செ. சுதர்சனம்

சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் எஸ். சுதர்சனம், அவைத் தலைவர் டி.துரை, துணைச் செயலாளர்கள் தா.இளையஅருணா, டி.ராம கிருஷ்ணன், அறிவழகி பால கிருஷ்ணன், பொருளாளர் எல். அருளரசன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், கே.பி.பி.சாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.சிவசங்கர், குறிஞ்சி எஸ்.கணேசன், இரா.முருகேசன், புழல் எம்.நாராயணன், வி.சிவகுமார், மேனகா நித்தியானந்தனம்.

சென்னை கிழக்கு மா.செ. சேகர்பாபு

சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே. சேகர்பாபு, அவைத் தலைவர் கோ.ஏகப்பன், துணைச் செயலாளர்கள் தேவ ஜவகர், அ.மணிவேலன், எ.புனிதவதி, பொருளாளர் இசட். ஆசாத், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செங்கை சிவம், ப.ரங்கநாதன், எஸ்.பன்னீர்செல்வம், புரசை கோ.மணி, டி.வி.சதீஷ்குமார், எம்.விஜயகுமார், பி.ஜெ. துளசிங்கம், சாவித்திரி தேவி.

சென்னை மேற்கு மா.செ. ஜெ. அன்பழகன்

சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், அவைத் தலைவர் எம்.டி.ஆர்.நாதன், துணைச் செயலாளர்கள் ஆர்.என்.துரை, கே.எஸ்.மணி (எ) வெல்டிங் மணி, செல்வி சௌந்தரராஜன், பொருளாளர் ஐ.கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆற்காடு நா.வீராசாமி, ஏ.கே.ஜெகதீசன், கு.க.செல்வம், ஏ.டி.முருகன், துங்கை வி.எஸ்.ராஜ், ஆலப்பாக்கம் கு.சண்முகம், மு.ராஜதுரை, கே.பார்த்திபன், எம்.பழனி, எம்.ராஜகாந்தம், வா. ஷீபா.

தெற்கு மா.செ. மா.சு, தனசேகரனுக்கு தலைமை செயற்குழு உறுப்பினர்

சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன், அவைத்தலைவர் எஸ்.குணசேகரன், துணைச் செயலாளர்கள் த.விசுவநாதன், துரை. கபிலன், பா.வாசுகி, பொருளாளர் எம்.எஸ்.கே.இப்ராகீம்,

தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க.தனசேகரன், மு.மகேஷ்குமார், சைதை சம்பத், க.ஏழுமலை, எம்.ஸ்ரீதரன், உ.துரைராஜ், மா.அன்பரசன், எஸ்.பாஸ்கர், ஆர்.டி.பூபாலன், சி.என்.கீதா.

இவ்வாறு க. அன்பழகன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK will announce the DMK's Chennai's four district Secretaries on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X