சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம்.. 23ஆம் தேதி குரல் வாக்கெடுப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சபாநாயகர் மீது திமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வரும் வியாழக்கிழமை குரல் வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதற்கான கடிதம் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி சட்டப்பேரவை செயலளரிடம் அளிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசின் ஆதரவை நிரூபிக்க கடந்த மாதம் தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தன.

ஆனால் சபாநாயகர் இதனை ஏற்க மறுத்தார். இதனால் சட்டசபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்து. நாற்காலிகள் மேசைகள் தூக்கி வீசப்பட்டன. சட்டைக் கிழிப்பு சம்பவங்களும் அரங்கேறின.

நம்பிக்கை வாக்கெடுப்பு

நம்பிக்கை வாக்கெடுப்பு

இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சியினர் இல்லாமலே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நம்பிக்கையில்லா தீர்மானம்

நம்பிக்கையில்லா தீர்மானம்

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தார். இதுகுறித்த கடிதம் கடந்த பிப்ரவரி 21அம் தேதி சட்டசபை செயலாளரிடம் வழங்கப்பட்டது.

வியாழக்கிழமை குரள் வாக்கெடுப்பு

வியாழக்கிழமை குரள் வாக்கெடுப்பு

கடிதம் அளித்த 15 நாட்களுக்குள் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தியாக வேண்டும். இந்நிலையில் வரும் வியாழக்கிழமை சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10% உறுப்பினர்களின் ஆதரவு தேவை

10% உறுப்பினர்களின் ஆதரவு தேவை

துணை சபாநாயகரான பொள்ளாச்சி ஜெயராமன் இந்த குரள் வாக்கெடுப்பை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குரல் வாக்கெடுப்பு நடத்த 10% உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும். தற்போதுள்ள நிலையில் திமுக 89 சட்டசபை உறுப்பினர்களுடன் பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK brought no-confidence motion on the Speaker in Tamilnadu assembly. on this the voice vote takes place on Thursday. The letter was given to the Secretariat of the Assembly on February 21.
Please Wait while comments are loading...