பிப்ரவரி 22 முதல் வேட்பாளர் நேர்காணல் - திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு !
சென்னை: வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான நேர்காணல் வருகிற 22 ஆம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக் கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத் தேர்தலுக்கு போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்தில் விண்ணப்பண் தந்துள்ளவர்களை தலைவர் கலைஞர் அவர்கள் 22.2.2016 திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பின்வரும் மாவட்ட வாரியாக சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து கொகுதி நிலவரம் - வெற்றி வாய்ப்புகள் குறித்து அறிந்திட இருக்கிறார்கள்.
குறிப்பிட்டுள்ள தேதிகளில், குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர் மட்டும் வரவேண்டும். மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர, பகுதிச் செயலாளர்கள் வரவேண்டிய அவசியமில்லை வேட்பாளர்கள் தங்களுக்கான ஆதரவாளர்களையோ - பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும், அவர்களையெல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட வாரியாக நேர்காணல் நடைபெறும் தேதி விவரம்:
பிப். 22 காலை 9: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம்
பிப். 22 மாலை 4: விருதுநகர், தேனி, திண்டுக்கல்
பிப். 23 காலை 9: சிவகங்கை, மதுரை புறநகர், மதுரை மாநகர், ஈரோடு
பிப். 23 மாலை 4: நீலகிரி, கோவை, கோவை மாநகர், சேலம், திருப்பூர்
பிப். 24 காலை 9: புதுக்கோட்டை, நாமக்கல், திருச்சி
பிப். 24 மாலை 4: கரூர், பெரம்பலூர், அரியலூர்
பிப். 25 காலை 9: நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூர்
பிப். 25 மாலை 4: விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி
பிப். 26 காலை 9: திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம்
பிப். 26 மாலை 4: திருவள்ளூர், சென்னை
பிப். 27 காலை 9: புதுவை, காரைக்கால்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்!












Click it and Unblock the Notifications