For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவின் உற்சாக போஸ்டருக்குப் போட்டியாக திமுகவின் 'உட்டாலக்கடி' போஸ்டர்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஒளிரும் நிகழ்காலம்... மிளிரும் வருங்காலம் என்றும் தழைக்கட்டும் தமிழகம் செழிக்கட்டும் தமிழர்கள் என்றும் வாக்காளர்களை கவர அதிமுகவின் ஐ.டி அணி களமிறங்கினால் அதற்கு பதிலடி தரும் வகையில் தப்பிக்கட்டும் தமிழகம், பிழைக்கட்டும் தமிழர்கள் என்று போஸ்டரை ரெடி செய்து வாட்ஸ்அப்பில் வலம் வரச்செய்கிறது திமுக.

சுவரொட்டிகளில் சின்னத்தை வரைந்து பிரபலப்படுத்தினார்கள். இப்போதோ ஆட்சியை தக்கவைக்கவும், மீண்டும் ஆட்சியை பிடிக்கவும், சுவரொட்டிகளை ஒட்டி மக்களை கவர்கின்றனர்.

DMK comes up with rival poster to ADMK

2016ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர் அரசியல் தலைவர்கள். ஆளும் கட்சியான அதிமுகவின் ஐ.டி அணி டிஜிட்டல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. பச்சை வண்ண போஸ்டர்கள் வசீகரிக்கின்றன. ஒளிரும் நிகழ்காலம்... மிளிரும் வருங்காலம் என்று சொன்னது போய் இப்போதோ சாதனைகளை சொல்லும் போஸ்டர்கள் உலா வருகின்றன. யுடியூப், வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், டுவிட்டர் என அதிமுகவின் சாதனையை விளக்கும் போஸ்டர்கள் கண்ணை பறிக்கின்றன.

தாலிக்கு தங்கம், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு, 20 கிலோ விலையில்லா அரிசி, தமிழக மீனவர்கள் விடுதலை, அம்மா உணவகம் என சாதனைகளை சொல்லும் போஸ்டர்கள் உலா வருகின்றன.

DMK comes up with rival poster to ADMK

திமுக பதிலடி

இந்த சாதனை விளக்க போஸ்டர்களுக்கு பதிலடி தரும் வகையில் திமுகவினர் உடனடியாக போஸ்டர்கள் தயார் செய்து விட்டனர். அந்த போஸ்டரில், ஆயிரம் கோடி ரூபாய்க்கு தியேட்டர்கள் வாங்கியது, தாமிரபரணி தண்ணீரை பெப்சி நிறுவனத்திற்கு தாரை வார்த்தது, 40 ரூபாய்க்கு ரேசனில் விற்பனை செய்யப்படும் துவரம் பருப்பை 110 ரூபாய்க்கு அங்காடிகளில் விற்பனை செய்வது, டெங்கு காய்ச்சலை மறைப்பது, கோவன் கைது, கொடநாட்டில் ஜெ ஓய்வு என பட்டியலிட்டுள்ளது. பஞ்ச் வைக்கும் வகையில், ‘தப்பிக்கட்டும் தமிழகம், பிழைக்கட்டும் தமிழர்கள்' என்றும் கூறுகிறது அந்த போஸ்டர்.

தொடரட்டும் பொற்காலம் என்று சொல்லி வாக்கு கேட்ட திமுகவிற்கு என்ன கதி அடைந்தோம் என்று தெரியாதா என்ன?

English summary
DMK has put up rival posters to the ADMK's posters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X