பேனரில் உள்ள அரசியல்.. திமுகவில் நடக்க போகும் மாற்றத்தை சூசகமாக சொன்ன பிளக்ஸ்
திமுக செயற்குழு கூட்டத்திற்காக அண்ணா அறிவாலயம் முன் வைக்கப்பட்டு இருக்கும் பேனர்களில் சில முக்கியமான விஷயங்களை திமுக உறுப்பினர்கள் ரகசியமாக தெரிவித்து இருக்கிறார்கள்.
Recommended Video

சென்னை: திமுக செயற்குழு கூட்டத்திற்காக அண்ணா அறிவாலயம் முன் வைக்கப்பட்டு இருக்கும் பேனர்களில் சில முக்கியமான விஷயங்களை ரகசியமாக திமுக உறுப்பினர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
தமிழகத்தின் முதுபெரும் தலைவர் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் முதல் முறையாக திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. முக்கிய தலைவர்கள் எல்லோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. தமிழகம் முழுக்க எல்லா திமுக மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்கள், தலைவர்கள் வந்து கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

இரங்கல் தீர்மானம்
திமுக செயற்குழு கூட்டத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். இரங்கல் தீர்மானத்தின் நகல் எல்லோருக்கும் வழங்கப்பட்டது. கருணாநிதி நிகழ்த்திய சாதனைகள் வரிசையாக அதில் பட்டியலிடப்பட்டுள்ளது.

பெரிய ஏற்பாடு
திமுக செயற்குழு கூட்டத்திற்காக அண்ணா அறிவாலயம் முன் நிறைய பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டது. இதற்காக பெரிய அளவில் மேடைகள் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அந்த சாலையிலும் பெரிய அளவில் பேனர்கள் வைக்கப்பட்டு ஏற்பாடுகள் பலமாக உள்ளது.

முதல்முறை ஸ்டாலின்
இந்த பேனரில் முதல்முறையாக, பெரியார், அண்ணா, கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. எப்போதும் தனியாக இருக்கும் ஸ்டாலின் புகைப்படம், இந்த முறை கருணாநிதிக்கு அருகிலேயே வைக்கப்பட்டுள்ளது.

பெரிய எதிர்பார்ப்பு
இது திமுகவில் பெரிய வைரலாகி உள்ளது. அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று உறுதியாகிவிட்டது என்று திமுக தொண்டர்கள் சிலர் இதை வைத்து பேசிக்கொள்கிறார்கள். ஆனால் அறிவிப்பு எப்போது வரும் என்று எதிர்பார்ப்புத்துக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?












Click it and Unblock the Notifications