For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லோக்சபா தேர்தல்: மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழு அறிவிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மு.க. ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

திமுக பொதுச்செயலர் க. அன்பழகன் இன்று வெளியிட்ட அறிக்கை:

2014 நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட தி.மு.க. தலைமைக் கழகம் குழு அமைத்துள்ளது.

DMK form panel on seat sharing

அந்த குழுவில், மு.க.ஸ்டாலின் (பொருளாளர், தி.மு.க.,) துரைமுருகன் (துணைப் பொதுச்செயலாளர், தி.மு.க.,) வி.பி. துரைசாமி (துணைப் பொதுச்செயலாளர், தி.மு.க.,) ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி (தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர்) பெ.வீ. கல்யாணசுந்தரம் (அமைப்புச் செயலாளர், தி.மு.க.,) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.

தேர்தல் அறிக்கை குழு

இதேபோல் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழுவையும் திமுக அறிவித்துள்ளது. அக்குழுவில், டி.ஆர். பாலு, எம்.பி., (தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவர்). கனிமொழி, எம்.பி., (தி.மு.க. மாநிலங்களவைக்குழுத் தலைவர்), ஆ. இராசா, எம்.பி., (தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர்), திருமதி எஸ்.பி.சற்குணபாண்டியன் (தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர்),

டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி., (தி.மு.க. அமைப்புச் செயலாளர்), திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் (தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்), பேராசிரியர் அ. இராமசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

English summary
The DMK has constituted a four-member team lead by MK Stalin to hold seat-sharing talks with its alliance partners for forthcoming lok sabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X