For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் காப்பு! சினிமா சூட்டிங் பணம் மூலம் நூதனமான சதுரங்க வேட்டை!

Google Oneindia Tamil News

ஶ்ரீவில்லிப்புத்தூர்: சினிமா சூட்டிங் பணத்தை வைத்து நூதனமான முறையில் ஏமாற்றும் சதித் திட்டம் தீட்டியதாக திமுக நிர்வாகி உட்பட 5 பேரை ஶ்ரீவில்லிப்புத்தூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ67 லட்சம் டம்மி பணம், சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டன.

Recommended Video

    சினிமா சூட்டிங் பணத்தை வைத்து நூதனமான முறையில் ஏமாற்றும் சதித் திட்டம் - வீடியோ

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தாணிப்பாறை - சேதுநாராயணபுரம் விலக்கு பகுதியில் கேரளாவைச் சேர்ந்த சஜித் குமார் , கூடலூரை சேர்ந்த கனகசுந்தரம், திண்டுக்கல்லை சேர்ந்த மணி, கொடைக்கானல் செல்வம் ஆகிய 4 பேர் காரில் நின்றிருந்தனர்.

    DMK Functionary arrest in Cheating case

    அவர்கள் 4 பேரும் கூமாப்பட்டியை சேர்ந்த கொடிக்குளம் திமுக பேரூராட்சி 7-வது வார்டு செயலாளர் பூமிராஜ் அவரது நண்பர்கள் பாலமுருகன் ,குபேந்திரன், வினோத், ராஜா உள்ளிட்டோருடன் பணம் இரட்டிப்பு பரிமாற்ற மோசடி தொடர்பாக சதித் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். இதற்காக சினிமா சூட்டிங்கில் பயன்படுத்தப்படுகிற டம்மி பணம் ரூ67 லட்சம் கொண்டு வரப்பட்டது.

    ஆனால் இந்த சதித் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த சுஜித் குமார், கூமாபட்டி கொடிக்குளத்தை சேர்த திமுக நிர்வாகி பூமிராஜ் ஆகிய இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது அந்தப் பகுதியில் வத்திராயிருப்பு காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு சுற்றிய போது இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்கு வாதத்தை பார்ததை அடுத்து அவர்களை அழைத்து வந்து வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் எஸ்.பி மனோகரன் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    DMK Functionary arrest in Cheating case

    இதில் கேரளாவைச் சேர்ந்த சுஜித் குமார் கொண்டு வந்த காரை பறிமுதல் செய்த போது அதில் இருந்த சினிமா ஷூட்டிங்கில் பயன்படுத்தப்படும் ரூபாய் 67 லட்சத்து 85 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வத்திராயிருப்பு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கேரளாவைச் சேர்ந்த சுஜித் குமார், திமுக வார்டு செயலாளர் பூமிராஜ், பாலமுருகன்,குபேந்திரன், கனகசுந்தரம் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இச்சம்பவம் ஶ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    DMK Functionary arrest in Cheating case near Virudhunagar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X