For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூட்டணி கட்சிகளுக்கு 54 தொகுதிகள் ஒதுக்கீடு- 180 தொகுதிகளில் திமுக போட்டி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திமுக தமது கூட்டணி கட்சிகளுக்கு 54 தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து 180 தொகுதிகளில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ளது.

DMK may contest in 180 constituencies

திமுக கூட்டணியில்

காங்கிரஸ் -41

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- 5

மனித நேய மக்கள் கட்சி-5

சமூக சமத்துவ படை கட்சி- 1

விவசாய தொழிலாளர் கட்சி-1

பெருந்தலைவர் மக்கள் கட்சி-1

என மொத்தம் 54 தொகுதிகள் அதிகாரப்பூர்வமாக ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. எஸ்டிபிஐ கட்சியும் திமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுக கூட்டணியில் இனி வேறு கட்சிகளுக்கு இடமில்லை என்றார்.

இதனடிப்படையில் எஞ்சிய 180 தொகுதிகளில் திமுக போட்டியிட முடிவு செய்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் திமுக 119 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு 23 இடங்களில் வென்றிருந்தது.

இதற்கு முன்னர் 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 202 இடங்களில் திமுக போட்டியிட்டு 150 இடங்களைக் கைப்பற்றியிருந்தது.

1977-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக 230 இடங்களில் போட்டியிட்டு 48 இடங்களில்தான் வென்றது. அத்தேர்தலில்தான் அதிமுக அமோக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் முதல்வரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
DMK will contesting 180 seats and 54 seats for coalition partners in upcoming assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X