For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சேலம் விமான நிலைய விரிவாக்கம்.. திமுக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

சேலம் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து காலையில் இருந்து போராடி வருகிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சேலம்: சேலம் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து காலையில் இருந்து போராடி வருகிறது.

சேலம் விமான நிலையம் 1993ம் ஆண்டு திறக்கப்பட்டது. 1060 ஏக்கரில் விமான நிலையம் திறக்கப்பட்டது. ஆனால் போதிய வரவேற்பு இல்லாததால் சில மாதங்களில் மூடப்பட்டது. பின் மீண்டும் 2013ல் திறக்கப்பட்டு சில தனியார் விமானங்கள் மட்டும் இயங்கி வந்தது.

DMK protest against Salem airport expansion

ஆனால் போதிய வரவேற்பு இல்லாததால் மீண்டும் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் இப்போது சேலம் விமான நிலையத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக விவசாய நிலையங்களை கையகப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

சுமார் 570 ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்த இருக்கிறது. இதனால் சேலம் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறது. ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதில் திமுக உறுப்பினர் ராஜேந்திரன் தலைமையில் போராட்டம் நடக்கிறது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. மக்கள் பலர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

English summary
DMK protest against Salem airport expansion as Government want agriculture land for expansion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X