காவல்துறையின் தடையை மீறி கோவை மாநகராட்சியை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்.. கைது!
கோவை மாநகராட்சியை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை மாநகராட்சியை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நகரின் குடிநீர் பராமரிப்பு பணிகளுக்கான அனுமதியை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதாக கூறி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர். அப்போது, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் எனும் தனியார் நிறுவனத்திற்கு கோவை மக்களின் கனவு திட்டமான 24 மணி நேர குடிநீர் சேவைக்கான பராமரிப்பு பணிகளை 26 ஆண்டு காலத்திற்கு ரூ.3ஆயிரத்து 150 கோடி மதிப்பில் அனுமதி வழங்கியது கண்டனத்துக்கு உரியது என்று போராட்டக்கார்கள் தெரிவித்தனர்.

மத்திய அரசின் நிதி உதவி பெற்று மாநில அரசின் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மாநகராட்சி என அரசு நிறுவனத்தின் மூலம் திட்டத்தை செயல்படுத்தாமல் வரலாற்றில் இல்லாதவாறு தனியார் மூலம் குடிநீர் விநியோகத்தை செயல்படுத்துவது ஏற்க முடியாது என்றும் ஆவேசத்தோடு கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ கார்த்திக், முறையாக பொதுமக்களின் கருத்துக்கேட்பு இல்லாமல் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு முயல்வதாகவும், திட்டம் தொடர்பான தகவல்களை முழுமையாக தெளிவாக வெளியிட தயங்குவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
காவல்துறையினர் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் இறுதியில் கைது செய்தனர்.
-
துரைமுருகன் திரும்பி சென்றது ஏன்.. மகளிரணி கூட்டத்தில் என்ன நடந்தது.. திமுக ஐடி விங் விளக்கம் -
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
துரைமுருகன் Out? ஆ.ராசா In.. திமுக செயல் தலைவராகும் கனிமொழி? அறிவாலயத்தை ரவுண்ட் கட்டும் யூகங்கள்! -
2K கிட் டைம் டிராவல் செய்து கருணாநிதியை சந்தித்தால் எப்படி இருக்கும்? ஒரு ஜாலியான, சீரியஸ் கற்பனை -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications