For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவின் அடுத்த லிஸ்டில்.. பொன்முடி, எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், முத்துசாமி?

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திமுகவினர் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிரமுகர்கள் மீதும் நடவடிக்கை பாய இருப்பதாக அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோக்சபா தேர்தலில் திமுக தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து அக்கட்சியை சீரமைக்கும் நடவடிக்கை மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக 33 பேர் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்டனர். அவர்களில் பழனி மாணிக்கம், முல்லைவேந்தன், கே.பி. ராமலிங்கம், இன்பசேகரன், பாரப்பட்டி சுரேஷ் ஆகியோர் அடங்குவர்.

இதைத் தொடர்ந்து மேலும் 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முன்னாள் அமைச்சர்கள் பூங்கோதை, லாரன்ஸ் மற்றும் தூத்துக்குடி அனிதா ராதாகிருஷ்ணன் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.

62 பேர் மீது நடவடிக்கை

62 பேர் மீது நடவடிக்கை

இந்த நிலையில் அடுத்தததாக 62 பேர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பட்டியல் தயாராகி இருப்பதாக அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பட்டியலில் பெரும்பாலும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பொன்முடி, எ.வ.வேலு

பொன்முடி, எ.வ.வேலு

விழுப்புரம் பொன்முடி, முன்னாள் எம்.எல்.ஏ புஷ்பராஜ், குமராட்சி ஒன்றிய செயலர் மாமன்னன், திருவண்ணாமலை எ.வ.வேலு, கடலூர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலர் சிவகுமார் என ஸ்டாலின் ஆதரவாளர்கள் பலரது பெயரும் இருக்கிறதாம்.

ஈரோடு முத்துசாமி

ஈரோடு முத்துசாமி

இதேபோல் தருமபுரி செங்குட்டுவன், சேலம் சிவலிங்கம், ஈரோடு என்.கே.கே.பி. ராஜா, முத்துசாமி, கோவை முன்னாள் துணை மேயர் கார்த்தி ஆகியோருக்கும் ஓலை போக இருக்கிறதாம்

மதிவாணன்

மதிவாணன்

திருவாரூர் முன்னாள் அமைச்சர் மதிவாணன், திருப்பூர் வெள்ளக்கோவில் சாமிநாதன், பெரம்பலூர் துரைசாமி, ராமநாதபுரம் சுப.தங்கவேலன், சிவகங்கை பெரியகருப்பன், விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், தேனி மூக்கையா, நெல்லை கருப்பசாமிபாண்டியன், தூத்துக்குடி பெரியசாமி, கன்னியாகுமரி சுரேஷ்ராஜன், ஆஸ்டின், திருவொற்றியூர் கே.பி.பி.சாமி ஆகியோரது பெயரும் 62 பேர் பட்டியலில் இருக்கிறதாம்.

English summary
DMK may take action against 62 leaders including former ministers Ponmudi, Velu for poll debacle
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X