For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி: மறியல், போராட்டம் .. போர்க் களமாக மாறியது தமிழகம்

தமிழகத்தில் 5-ஆவது நாளாக திமுக மறியல் போராட்டம் நடத்தி வருகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழகத்தில் 5-ஆவது நாளாக திமுக மறியல் போராட்டம்

    சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தமிழகமே போர்க் களமாக மாறியுள்ளது.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுதும் இன்று கடையடைப்பு போராட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்தன. அதன்படி இன்றைய ஸ்டிரைக் போராட்டத்துக்கு பெரும்பாலான கடைகள் கடைகள் அடைக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    இதுமட்டுமல்லாமல் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் ரயில் நிலையங்களில் ரயில் மறியல் போராட்டத்தையும் நடத்தி வருகின்றன. மேலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

    திமுக எம்எல்ஏ

    திமுக எம்எல்ஏ

    கிருஷ்ணகிரியில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் உள்ளே நுழைந்த திமுகவினருக்கும் போலீசாருக்கும் கடும் தள்ளு திமுக எம்.எல்.ஏ சிவா அலுவலகத்தில் படுத்துக்கொண்டு போராட்டம் நடத்தினர். புதுச்சேரி வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்த 50 க்கும் மேற்பட்ட தந்தை பெரியார் திராடவிட கழகத்தினரை போலீஸார் கைது செய்தனர்.

    500-க்கும் மேற்பட்டோர் போராட்டம்

    500-க்கும் மேற்பட்டோர் போராட்டம்

    மதுரையில் அனைத்து கட்சியினர் சார்பில் மதுரை ரயில் நிலையத்தில் நாகர்கோயில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதுபோல் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி அரசரடி பகுதியில் தி.மு.க. உட்பட எதிர்க் கட்சிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் உள்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கம்யூனிஸ்ட் கட்சி

    கம்யூனிஸ்ட் கட்சி

    திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக சட்டமன்ற உறுப்பினா் இரா.ஜெயராமகிருஷ்ணன் தலைமையில் மதிமுக கம்யூனிஸ்ட் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சியினா் சாலை மறியல் போராட்டம் 1000க்கும் மேற்பட்டோா் கைது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சாலை மறியலில் பேருந்து நிலையம் முன்பாக திரண்ட திமுக கூட்டணி கட்சிகள் சாலையை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.

    வள்ளியூரில்...

    வள்ளியூரில்...

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் மற்றும் சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம், சத்தியமங்கலம், வேதாரண்யம் பேருந்து நிலையம், கோவை - மைசூர் நெடுஞ்சாலை ஆகிய இடங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டம், வள்ளியூரில் திமுக, காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட்டு, பெருந்தலைவர் மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் கட்சி சார்பில் 1000 - க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

    ரயில் நிலையம்

    ரயில் நிலையம்

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் காவேரி மேலாண்மை அமைக்க நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக ரயில் மறியலில் ஈடுபட ரயில் நிலையம் அருகே சென்ற திமுகவினரை போலீஸார் கைது செய்தனர். திருப்பூர் ரயில் நிலையத்தில் கோவை சேலம் பயணிகள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    English summary
    DMK continues road roko protest in Tamilnadu for 5 th day as it declares protest will continue till Cauvery board constitutes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X