For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக அணியில் 13 கட்சிகள்- விஜயகாந்துக்கு 'டாட்டா' - லியாகத் அலிகானை சேர்த்தது!

By Mathi
|

சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக அணியில் 13 கூட்டணிக் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. திமுக மிகவும் எதிர்பார்த்த தேமுதிகவுக்கு கதவு சாத்தப்பட்டு விஜய்காந்தின் முன்னாள் நெருங்கிய நண்பரும் வசனகர்த்தாவுமான லியாகத் அலிகானை கூட்டணியில் சேர்த்துக் கொண்டது திமுக.

லோக்சபா தேர்தலில் திமுக, பாஜக- காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து தேமுதிகவுடன் திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

தேமுதிகவும் திமுக அணியில் இணையும் நிலை உருவானது. அப்போதுதான் தேமுதிக தலைவர் விஜயகாந்தெல்லாம் ஒரு தலைவரா? திமுக கூட்டணி வைத்தால் உருப்படாது என்று திமுக தென்மண்டல அமைப்புச் செயலர் மு.க. அழகிரி கொந்தளித்தார். இதனால் திமுக- தேமுதிக கூட்டணி உருவாகாத நிலை ஏற்பட்டது.

உளுந்தூர்பேட்டை மாநாடு

உளுந்தூர்பேட்டை மாநாடு

கடந்த 2-ந் தேதி உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற தேமுதிகவின் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் திமுகவையும் விஜயகாந்தும் அவரது மனைவி பிரேமலதாவும் விட்டுவைக்கவில்லை.

தேமுதிக வருவது சந்தேகம்

தேமுதிக வருவது சந்தேகம்

இதனால் திமுக அணியில் இடம்பெறுவது சந்தேகம்தான் என்ற நிலை உருவானது.

திமுக மாநாட்டு அழைப்பிதழ்

திமுக மாநாட்டு அழைப்பிதழ்

இந்நிலையில் திமுகவின் திருச்சி மாநாட்டு முதல் அழைப்பிதழ் நேற்று அக்கட்சித் தலைவர் கருணாநிதியிடம் கொடுக்கப்பட்டது.

13 கட்சிகள் ஆதரவு

13 கட்சிகள் ஆதரவு

அதில் திருச்சி திமுக மாநாட்டில் பங்கேற்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. திராவிடர் கழகம், திராவிட இயக்க தமிழர் பேரவை ஆகிய சமூக அமைப்புகள் மற்றும் 13 அரசியல் கட்சிகள் பெயர் இதில் இடம்பெற்றுள்ளன.

4 முஸ்லிம் கட்சிகள்- 2 பார்வார்டு பிளாக் கட்சிகள்

4 முஸ்லிம் கட்சிகள்- 2 பார்வார்டு பிளாக் கட்சிகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, எம்.ஜி.ஆர். கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி, ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி,அகில இந்திய பார்வார்டு பிளாக், அகில இந்திய வல்லரசு பார்வார்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ் மாநில தேசிய லீக், சிறுபான்மை கழகப் புரட்சி இயக்கம் ஆகியவைதான் திமுகவின் கூட்டணி கட்சிகள்.

விஜயகாந்தின் எதிரி லியாகத்

விஜயகாந்தின் எதிரி லியாகத்

இவற்றின் தலைவர்கள் திருச்சி திமுக மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். இதில் சிறுபான்மை கழகப் புரட்சி இயக்கம் என்பது விஜயகாந்தின் முன்னாள் நெருங்கிய நண்பரும் ஆஸ்தான வசனகர்த்தாவுமாக இருந்த லியாகத் அலிகானின் கட்சி. சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயகாந்தைவிட்டு விலகி அவரை நன்றி மறந்த துரோகி என கடுமையாக விமர்சித்தார் லியாகத் அலிகான். அதன் பின்னர் அதிமுக ஆதரவாளராக இருந்தார். கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவை ஆதரித்தார். தற்போது விஜயகாந்த் முடிவு எதுவும் சொல்லாத நிலையில் அவருக்கு கதவை சாத்திவிட்டு அவரது முன்னாள் நண்பரான லியாகத் அலிகானை சேர்த்துக் கொணடுள்ளது திமுக.

திமுக- தேமுதிக கூட்டணி இல்லை

திமுக- தேமுதிக கூட்டணி இல்லை

இனி திமுக- தேமுதிக கூட்டணிக்கு சாத்தியம் இல்லை என்பதையே திருச்சி திமுக மாநில மாநாடு வெளிப்படுத்துகிறது.

English summary
Now DMK shut doors to DMDK leader Vijayakanth and include his former friend and noted dialogue writer Liyakath Ali Khan's party for forthcoming lok sabha elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X