For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெருகேறிய கருணாநிதி, ஸ்டாலின் சமூக வலைதளங்கள்: காய்ந்து கிடக்கும் கட்சியின் இணையதளம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திமுக-வில் தலைவர் கருணாநிதியின் முகநூல் மற்றும் பொருளாளர் ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ இணையதளம், முகநூல், டிவிட்டர் ஆகியவை நிமிடத்துக்கு நிமிடம் ‘அப்-டேட்' செய்யப்பட்டு மெருகேறி வருகின்றன.

ஆனால், திமுக கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம் கவனிப்பாரின்றி ஒரு மாதமாக நீக்கப்பட்ட நிர்வாகியின் பெயரைக்கூட எடுக்காமல் உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது.

ஸ்டாலின் முகநூல்

ஸ்டாலின் முகநூல்

திமுக பொருளாளர் ஸ்டாலின் தனது பெயரில் அதிகாரப்பூர்வமான இணையதளத்தை இயக்குகிறார். அதில் ‘லேட்டஸ்ட் நியூஸ்' என்று கட்சி செய்திகள் அப்-டேட் செய்யப்பட்டு ‘ஸ்ரோலிங்'காக ஓடுகின்றன.

டிவிட்டரிலும் தொடரலாம்

டிவிட்டரிலும் தொடரலாம்

கூடவே, அதில் ‘என்னை முகநூலில் பின்தொடருங்கள்', ‘நீங்கள் டிவிட்டரிலும் என்னைத் தொடரலாம்' என்று ஸ்டாலின் அழைக்கிறார். கட்சி கூட்டங்களில் ஸ்டாலின் அடிமட்ட தொண்டர்களின் தோளில் கைபோட்டுகொண்டு நிற்கும் படங்களும், அவரது சொற்பொழிவுகளும் பதிவிடப்படுகின்றன.

தினசரி லட்சக்கணக்கில்

தினசரி லட்சக்கணக்கில்

ஸ்டாலினின் முகநூல், நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான ‘லைக்'களை அள்ளுகிறது. ஸ்டாலின் தவிர, ஸ்டாலினின் நண்பர்கள் வட்டாரம், உறவினர் வட்டாரங்கள் தனித்தனியாக ஸ்டாலினுக்கு ஆதரவாக முகநூல் பக்கங்களையும் டிவிட்டர் பக்கங்களையும் இயக்கி வருகின்றனர்.

கருணாநிதி முகநூல்

கருணாநிதி முகநூல்

இதேபோல் கட்சித் தலைவர் கருணாநிதியின் அதிகாரப்பூர்வ முகநூலும் மும்முரமாக இயங்குகிறது. கருணாநிதியின் அன்றாட அறிக்கைகளை மறுநாள் வரை காத்திருக்காமல் அவ்வப்போது முகநூலிலேயே தெரிந்துகொள்ள முடிகிறது.

2 லட்சம் லைக்குகள்

2 லட்சம் லைக்குகள்

பெரும் சாதனையாக நாள் ஒன்றுக்கு சுமார் இரண்டு லட்சம் லைக்குகளை அள்ளுகிறார் கருணாநிதி.

திமுக இணையதளம்

திமுக இணையதளம்

இப்படி சமூக வலைதளங்களில் மும்முரமாக இருக்கும் நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் மட்டும் கவனிக்க ஆளில்லாமல் உள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்களைக்கூட இணையதளத்தில் இருந்து நீக்காமல் உள்ளனராம்.

அமைப்புச் செயலாளர் யார்

அமைப்புச் செயலாளர் யார்

திமுக-வின் இரண்டு அமைப்புச் செயலாளர்களில் ஒருவராக இருந்த பெ.வீ.கல்யாணசுந்தரம் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் அவர் எழுதிய ஒரு கடிதம் காரணமாக கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அவருக்கு பதில் சட்டத்துறை செயலாளராக இருந்த ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

தொண்டர்கள் குழப்பம்

தொண்டர்கள் குழப்பம்

கல்யாணசுந்தரம் நீக்கப்பட்டு ஒரு மாதம் முடியப்போகிறது ஆனாலும் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாணசுந்தரம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது இதனால் திமுக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர் என்றே கூறப்படுகிறது. எனவே திமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும் கொஞ்சம் அப்டேட் செய்தால் நல்லது என்கின்றனர் தொண்டர்கள்.

English summary
DMK website is yearning for attention, but party chief Karunanidhi and Stalin sites are sizzling.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X