கனிமொழி பிறந்த நாளில் ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்த திமுக மகளிரணி நிர்வாகிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  களைகட்டிய கனிமொழி பிறந்த நாள்..ஸ்டாலின் வாழ்த்து..வீடியோ

  சென்னை: திமுக மகளிரணி செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழியின் பிறந்த நாளில் அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்து அக்கட்சி பெண் நிர்வாகிகள் வாழ்த்து பெற்றனர்.

  2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி விடுதலையானது முதலே அவரது சிஐடி காலனி வீடு தினந்தோறும் திருவிழா கோலத்தில் காட்சி தருகிறது. கனிமொழியின் ஆதரவாளர்கள் நாள்தோறும் சிஐடி காலனி வீட்டுக்கு படையெடுப்பது வழக்கமாகிவிட்டது.

  DMK Women's wing members touch Rajathi Ammal feet

  கனிமொழியின் அணியில் இணைவதில் திமுகவில் தற்போது ஓரம்கட்டப்பட்டிருப்பவர்கள் பலரும் ரொம்பவும் முனைப்பாகவே இருக்கின்றராம். இன்று கனிமொழியின் பிறந்த நாள் என்பதால் இந்த அதிருப்தியாளர்களின் வாழ்த்துகள்தான் அதிகம் கிடைத்ததாம்.

  திமுக மகளிரணி நிர்வாகிகளும் கனிமொழி தலைமையில் திரள்வதில் முனைப்புடன் இருக்கின்றனர். இன்று காலையிலேயே கனிமொழியின் வீட்டு முன்பு மகளிரணியினர் திரண்டுவிட்டனர்.

  இவர்களில் சிலர் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் காலில் விழுந்தும் வணங்கினர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  DMK women's wing members are touching the Rajathi Ammal feet in the Rajya Sabha MP Kanimozhi's Birthday celebrations on Friday.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X