எங்களுக்கு அனிதா டாக்டர்தான்.. ட்விட்டரில் டிரண்ட் ஆகி வரும் #DoctorAnitha

அரியலூர் அனிதாவுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கும் #DoctorAnitha இந்த ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மருத்துவ படிப்பு படிக்க ஆசைப்பட்டு அது நிறைவேறாததால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவுக்கு டாக்டர் பட்டம் கொடுத்துள்ளனர் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார்.

மருத்துவர் கனவு நிராசையான அனிதாவுக்கு டாக்டர் பட்டம் கொடுத்த நெட்டிசன்கள்.

எனக்கு டாக்டர்தான்...

எனக்கு அவ டாக்டர் தான்டா. நீங்க குடுக்காத Doctor பட்டத்த நாங்க குடுப்போம் அவளுக்கு.

நமது தலைமுறைக்காக...

அனிதா தனது சொந்த பிரச்சினைகளுக்காக தற்கொலை செய்து கொள்ளவில்லை. வருங்கால தலைமுறைக்காக தற்கொலை செய்து கொண்டார்.

தமிழகம் பெரும் புரட்சி சந்திக்கனும்

உன்னை இழந்த இந்த தமிழகம் பெரும் புரட்சியை சந்திக்க வேண்டுகிறேன்...

எம் வீட்டு பெண்தான் டாக்டர்

எத்தனயோ உயிரை காப்பாற்றிய டாக்டர்களை விட தன் உயிரை கொடுத்து தமிழனை நீட்தேர்வுக்கு எதிராக திருப்பிய எம் வீட்டுபெண்தான் டாக்டர்.

சிறந்த மருத்துவரை இழந்து விட்டோம்

வருங்கால மருத்துவரை சிறந்த மருத்துவரை இழந்துவிட்டோம்

டாக்டர் அனிதாவாக நிலைக்கட்டும்

உயிரோட இருக்கும்போதுதான் அவளை டாக்டர் ஆக இந்த சமூகம் விடல,

இறந்தபின்னாவது மக்கள் மனதில் டாக்டர் அனிதாவாக நிலைக்கட்டும்.

உயிருள்ள மாணவர்களுக்காக போராட...

வாயில்லாத மாட்டினம் அழிவதை தடுக்க ஒன்றிணைந்த நாம், உயிருள்ள மாணவர்களுக்காக போராட ஒன்றிணைவோம் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+