For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்புமணியை ஏத்துக்கங்க, பாமக கூட்டணிக்கு வாங்க... விஜயகாந்த்துக்கு ராமதாஸ் அழைப்பு

Google Oneindia Tamil News

திண்டிவனம்: டாக்டர் அன்புமணி ராமதாஸை, முதல்வர் வேட்பாளராக தேமுதிக ஏற்க வேண்டும். அப்படி ஏற்பதானால் அவர்களை எங்களது கூட்டணியில் வரவேற்க நாங்கள் தயார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிரடியாக கூறியுள்ளார்.

தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:

பாமக சார்பில் மாதிரி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மக்களிடம் விளக்கும் வகையில் பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அப்போது மீனவர்கள், தொழில் அதிபர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து பேசி அவர்களின் கருத்துக்களை கேட்டு அறிவார். பின்னர் அதன் அறிக்கையை கட்சி தலைமைக்கு தாக்கல் செய்வார். அதையடுத்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

Dr Ramadoss calls DMDK to his alliance with a condition

எங்கள் கட்சி சார்பில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளோம். இதை ஏற்று தேமுதிக எங்களோடு கூட்டணிக்கு வந்தால் அதை ஏற்றுக் கொள்வோம்.

விலைவாசி உயர்வு, மீனவர் பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்ற நேரத்தில் முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வு எடுக்கிறார். அவர் கடந்த 156 நாட்களில் ஒரு தடவை தான் அமைச்சரவை கூட்டத்தையே கூட்டி இருக்கிறார்.

ரூ.1500 கோடிக்கு சீன பட்டாசுகளை இறக்குமதி செய்துள்ளனர். பொம்மைகள் என்ற பெயரில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதை கண்டுபிடித்து பறிமுதல் செய்ய வேண்டும்.

Dr Ramadoss calls DMDK to his alliance with a condition

காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறந்து விடாததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் தங்களிடம் தண்ணீர் இருப்பு குறைவாக இருப்பதாக கூறுகிறார்கள். எனவே, இடர்பாடு காலங்களில் தண்ணீரை எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டுமோ அதுபோல் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார் டாக்டர் ராமதாஸ்.

English summary
PMK founder Dr Ramadoss has called DMDK to join PMK alliance with a condition for the assembly elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X