சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவர் இஷ்டம் என்றும் இதனால் திமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் இன்று கோடம்பாக்கத்தில் ரசிகர்கள் மத்தியில் பேசுகையில், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்றும் அறிவித்தார். மேலும் இத்தனை காலமாக ஆட்சி செய்தவர்களின் கட்சி பெயரை குறிப்பிடாமல் கொள்ளையடிப்பதாக கடுமையாக சாடினார்.

இதுகுறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறுகையில் ரஜினி அரசியலுக்கு வருவது அவரோட இஷ்டம். அதை நாங்கள் தடுக்கவா முடியும்.
திமுகவுக்கு ரஜினி வருகையால் எந்த பாதகமும் இருக்காது. திமுகவின் பாணியே தனி. ஆன்மீக அரசியல் செய்வதாக ரஜினிகாந்த் கூறியது அவர் பாணி, அதில் கருத்து கூற முடியாது என்றார் துரைமுருகன்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!