கோவையில் திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகி வெட்டிக் கொலை- ஒருவர் சரண்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை : கோவையில் திராவிடர் விடுதலைக்கழக நிர்வாகி ஃபாரூக் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அன்சத் என்பவர் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கோவையில் திராவிடர் விடுதலை கழகம், வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஃபாரூக் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல காவல்துறை மறுத்ததை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

DVK leader hacked to death in Coimbatore

திராவிடர் விடுதலை கழகம் நடத்திய பல போராட்டங்களில் ஃபாரூக் பங்கேற்று சிறை சென்றுள்ளார். முகநூல் பக்கங்களிலும் அதிகம் எழுதி வந்தார் ஃபாரூக். இந்த நிலையில் நேற்றிரவு உக்கடம் கழிவுநீர் பண்ணை அருகே அவரை மர்மநபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.

இந்த கொலை சம்பவம் கோவையில் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஃபாரூக் கொலை தொடர்பாக அன்சத் என்பவர் இன்று கோவை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A Dravida Viduthalai Kazhagam functionary was hacked to death in Coimbatore yesterday night. The killer has surrendered in court today.
Please Wait while comments are loading...