நெருங்கும் கடைசி நாள்... திணறும் இ சேவை மையங்கள் - தவிக்கும் மாணவர்கள்
நெல்லை: சிறுபான்மையினர் கல்வி உதவி தொகை பெற கடைசி நாள் நெருங்குவதால் மாணவர்கள் முற்றுகை காரணமாக இ சேவை மையங்கள் திணறி வருகின்றன.
தமிழகம் முழுவதும் வருவாய் துறையில் இ சேவை மையங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழ்நாடு இ கவர்னர்ஸ் முகமையின் கட்டுபாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திடடத்தின் மூலம் ஜாதி, வருமானம், இருப்பிட சான்று, முதல் பட்டதாரி சான்று, சமூக நலத்துறையின் திருணம உதவி தொகை திட்ட சான்றிதழ் உள்பட அனைத்தும் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
நெல்லை மாவட்டத்தில் முதன் முதலில் ராதாபுரம் தாலுகாவில் செயலபடுத்தப்பட்ட இந்த திடடம் பினபு அனைத்து தாலுகாவிலும் விரிவுப்படுத்தப்பட்டது. இதையடுத்து நெ்ல்லை மாவட்டத்தில் உள்ள 190 இ சேவை மையங்கள் மூலமே முக்கிய சான்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர், புத்த மதத்தினர் உள்ளிட்ட சிறுபான்மையினரில் 1ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை படிக்கும் பிற்பட்ட மாணவ. மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்க 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூலை 25ம் தேதி கடைசி நாள் எனவும், 9 முதல் 10ம் வகுப்புகளு்க்கு ஜூலை 30 கடைசி நாள் என்றும அதற்குள் விண்ணப்பிக்குமாறு பிற்பட்டோர் நலத்துறை அறிவித்துள்ளது.
இந்த மாணவர்கள் வருவாய் துறையில் இருநது பெறப்பட்ட வருமான சான்றிதழை இணைக்க வேண்டும். இதற்காக இந்த மாணவர்கள் இ சேவை மையங்களை முற்றுகையிட்டு வருகின்றனர். ஆனால் கிராமங்களில் செயல்பட்டு வரும் பெரும்பாலான இ சேவை மையங்களில் நாள் ஓன்றுக்கு 10 பேருக்கு மட்டுமே சான்றிதழ் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதில் சர்வரில் பழுது ஏற்படுவதால் பல சேவை மையங்கள் முடங்கி விடுவதாக கூறப்படுகிறது. இதனால் சிறுபான்மை மாணவர்கள் திணறி வருகின்றனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications