For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீர்மானத்தை 2 முறை முன்மொழிந்ததால் எடப்பாடியார் வென்றது செல்லாது.. சேடப்பட்டி முத்தையா

நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை ஒரே நாளில் இரண்டு முறை முன்மொழிய சபை விதிகளில் இடம் கிடையாது என்று முன்னாள் சபா நாயகர் சேடப்பட்டி முத்தையா கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஒரே நாளில் இரண்டு முறை நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை சட்டசபையில் முன்மொழிய முடியாது என்று முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா கூறியுள்ளார்.

இன்று காலையில் சட்டசபை தொடங்கிய உடன் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த தீர்மானத்தை முன்மொழிந்தார். இதனைத் தொடர்ந்து ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்று எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ், ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர்.

Edapadi Palanisamy win is not valid says Sedapatti Muthiah

இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் அமளியில் திமுகவினர் ஈடுபட்டனர். இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போது, எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முன் மொழிந்தார்.

இது சபை விதிகளுக்கு முரணானது என்று முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா கூறியுள்ளார். மேலும் கூறியதாவது:

சபைவிதிப்படி ஒரு தீர்மானம் முன்மொழியப்பட்டால், அதே தீர்மானம் மீண்டும் சபையில் கொண்டு வர முடியாது. திரும்ப கொண்டு வர வேண்டும் என்றால், முதலில் முன் மொழிந்த தீர்மானம் தோற்றுவிட்டது என்று அர்த்தம். அப்படி தோற்றுப் போன தீர்மானத்தையும் உடனடியாக கொண்டு வர முடியாது. அடுத்த 6 மாதம் கழித்துத்தான் அவையில் அதே தீர்மானத்தை முன்மொழிய முடியும்.

ஒருமணி நேரத்தில் திரும்ப கொண்டு வந்தால் அது விதிமுறைப்படி செல்லாது. எடப்பாடி பழனிச்சாமி இரண்டாவது முறையாக தீர்மானத்தை முன்மொழிந்துள்ளதால் அவை நடவடிக்கை செல்லாது என்று ஆளுநர் முடிவெடுக்க வேண்டிவரும் என்று முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா கருத்து தெரிவித்துள்ளார்.

English summary
CM Edapadi Palanisamy win is not valid said former speaker Sedapatti Muthiah.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X