ஓ.பன்னீர்செல்வத்திற்கு துணை முதல்வர் பதவியா?... ஈபிஎஸ் எடுக்கும் வெள்ளைக்கொடி அஸ்திரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுக அணிகள் இணைப்பு குறித்து இன்று முடிவு செய்து டெல்லியில் ரிப்போர்ட் கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இதில் ஓபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவி தரலாமா என்று நிர்வாகிகளுடன் கேட்க உள்ளாராம்.

இதன் காரணமாகவே அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Edappadi Palanisamy's next view to merge O.Paneerselvam

அதிமுகவின் இரு அணிகள் இணைய தினகரன் விதித்த கெடு முடிந்த நிலையில், பாஜக ஓ.பன்னீர்செல்வம், ஈபிஎஸ் அணிகள் இணைந்தால் தான் தேர்தல் கூட்டணி என்று கெடுபிடி காட்டியதாகத் தெரிகிறது.

இதனிடையே துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு நாளை பதவியேற்ற உள்ளார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இன்று மாலை டெல்லி செல்கின்றனர். அங்கு அணிகள் இணைப்பு பற்றி முக்கிய முடிவுகள் வெளியாகும்

OPS Says We are ready to speak for another ADMK team ஓபிஎஸ் எடப்பாடி பேச்சுவார்த்தை?

அதிமுக அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அவசர கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திடீரென ஏன் இந்த முடிவு என்றால் அவர்களை கட்சியை விட்டு நீக்கினாலே ஓ.பன்னீர்செல்வம் இணைந்து விடுவார் என்று கணக்கு போடுகிறாராம் பழனிசாமி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Edappadi Palanisamy planning to start merger talks with O.Paneerselvam with that of Deputy Cm offer to him and some ministers in the cabinet from OPS camp.
Please Wait while comments are loading...