சென்னையில் ஈ.வே.ரா. சாலை மீண்டும் இரு வழிப் பாதையாகிறது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, ஈ.வே.ரா சாலை மீண்டும் இரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

மெட்ரோ பணிகளுக்காக கடந்த 2011ம் ஆண்டு ஈ.வே.ரா சாலையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி ஈகா தியேட்டர் சந்திப்பு முதல் கெங்கு ரெட்டி சப்வே சந்திப்பு வரையிலான சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது.

Ega theatre and Gengu Reddy subway junction to be made two way from Aug 6

அதேபோல கெங்கு ரெட்டி சந்திப்பு முதல் கிழக்கு ஸ்பர் டாங்க் சாலை சந்திப்பு வரையிலும் ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது. கிழக்கு ஸ்பர் டாங்க் சாலை முதல் சேத்துப்பட்டு வரை ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டது.

தற்போது கெங்கு ரெட்டி சந்திப்பு முதல் ஈகா தியேட்டர் வரையிலான சாலையில் மெட்ரோ பணிகள் முடிந்து விட்டதால் அது இரு வழிப் பாதையாக மாற்றப்படுகிறது. ஆகஸ்ட் 6ம் தேதி முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
According to a press release, Ega theatre and Gengu Reddy subway junction in the EVR Road will be made two way from Aug 6 in Chennai.
Please Wait while comments are loading...