இவங்கதாங்க பாஜக இளைஞர் அணியின் சீரிய தொண்டர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக சார்பில் சென்னையில் நடந்த கோட்டையை நோக்கிய பேரணியில் பல சுவாரஸ்யமான காட்சிகளைக் காண நேர்ந்தது.

பாஜக இளைஞர் அணி சார்பில் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.

மும்பையைச் சேர்ந்த பாஜக எம்.பி. பூனம் மகாஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசையும் கலந்து கொண்டார்.

காமெடிக் காட்சிகள்

காமெடிக் காட்சிகள்

இந்த பேரணிக்காக சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு ஊர்களிலிருந்தும் ஆட்களைத் திரட்டி வந்திருந்தனர். ஆனால் போதிய அளவில் கூட்டம்தான் கூடவில்லை.

காலியாக வந்த பஸ்கள்

காலியாக வந்த பஸ்கள்

கரூர் உள்ளிட்ட தொலை தூரத்திலிருந்தெல்லாம் வாகனங்களில் ஆட்களைக் கூட்டி வந்தனர். ஆனால் அந்த வாகனங்கள் எல்லாம் பெரும்பாலும் காற்று வாங்கியபடி காணப்பட்டன. காலியான இருக்கைகளுடன் வந்த அந்த பஸ்களில் ஓரிரு தலைகளே காணப்பட்டன.

சீனியர் தொண்டர்கள்

பேரணியை நடத்தியது பாஜகவின் இளைஞர் அணி. ஆனால் இவர்களைப் பார்த்தால் இளைஞர் அணி என்று யாருமே சொல்ல முடியாது. அவவளவு சீனியர்களாக உள்ளனர். இதுபோலத்தான் நிறையப் பேரை பார்க்க முடிந்தது.

BJP will give change: syed shahnawaz hussain
வம்படியாக நடத்தினரா

வம்படியாக நடத்தினரா

திமுக, அதிமுக போல நாமும் ஏதாவது பேரணி நடத்தியாக வேண்டும் என்று வம்படியாக பாஜகவினர் இந்தப் பேரணிக்கு ஆட்களைத் திரட்டி வந்து கஷ்டப்பட்டு நடத்தியது போலவே தெரிந்தது.

பேரணி முடிந்ததும் சேர்ந்த குப்பைகளை பாஜகவினரே அகற்றியதை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
One could see many elderly women attended the BJP youth wing's rally in Chennai 2 days back.
Please Wait while comments are loading...