For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் திருவிழா... இவங்க எல்லோருமே ரொம்ப ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி!!

Google Oneindia Tamil News

சென்னை: ஊரில் திருவிழா என்றால் ஜவ்வு மிட்டாய் விற்பவர் முதல் ஊசி மணி பாசி மணி விற்பவர் வரை அத்தனை பேரும் ஏக சந்தோஷமாக இருப்பார்கள்.. அதேபோலத்தான் லோக்சபா தேர்தல் திருவிழாவையொட்டி பல்வேறு வகையான தொழில் பிரிவினரும் பரம சந்தோஷமாக காசு பார்த்து வருகின்றனராம்.

கொடி தயாரிப்பவர்கள், பேட்ஜ் தயாரிப்பவர்கள், போஸ்டர் அச்சடிக்கும் அச்சகங்கள், டிஜிட்டல் பேனர் தயாரிப்பவர்கள் என சகல தரப்பினருக்கும் ஆர்டர்கள் குவிந்து நல்ல காசு பார்த்து வருவதாக கூறுகிறது ஒரு தகவல்.

அவர்கள் மட்டுமா.. கார் டிரைவர்கள், ஆட்டிட்டர்கள், வக்கீல்கள் என மேலும் பலருக்கும் இந்த தேர்தலால் நல்ல வேலை கிடைத்து காசும் கொட்டோ கொட்டென்று கொட்டி வருகிறதாம்.

ஜூஸ் - டீக்கடைகளுக்கு கிராக்கி

ஜூஸ் - டீக்கடைகளுக்கு கிராக்கி

ஜூஸ் கடைகள், டீக்கடைகளிலேயே தேர்தல் திருவிழா பரவசம் தொடங்கி விடுகிறது. காலையில் பிரசாரம் செய்யக் கிளம்பும் அரசியல் கட்சியினர் தத்தமது பகுதிகளில் உள்ள டீக்கடைகள், ஜூஸ் கடைகளில் முன்கூட்டியே ஆர்டர் செய்து பிரசாரத்திற்கு வருவோரைக் கவனிப்பதால் டீக்கடைகள், ஜூஸ் கடைகளில் நல்ல வியாபாரம் நடக்கிறதாம்.

பிரிண்ட்டிங் செம பிசி...

பிரிண்ட்டிங் செம பிசி...

அச்சகங்கள்தான் பயங்கர பிசியாக உள்ளன. போஸ்டர்கள் அச்சிடுவது, பிட் நோடடீஸ் என்று சகல விதமான பிரசார மேட்டர்களையும் அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல் சுயேச்சைகளும் கொண்டு வந்து குவிப்பதால் 24 மணி நேரமும் வேலை நடந்து வருகிறதாம்.

கொடி - பேனர் - பேட்ஜ்கள்

கொடி - பேனர் - பேட்ஜ்கள்

கட்சிக் கொடிகள், பேனர்கள், தலைவர்கள் படம் அடங்கிய பேட்ஜ் தயாரிப்பும் மும்முரமாக உள்ளதால் இவர்களுக்கும் நல்ல வருவாய் கிடைத்து வருகிறதாம். ஷிப்ட் போட்டு வேலை நடக்கிறதாம்.

மேடை போடுவோர், பந்தல் கட்டுவோர்

மேடை போடுவோர், பந்தல் கட்டுவோர்

அதேபோல பிரசாரக் கூட்டங்களுக்கான மேடை போடுவோர், பந்தல் போடுவோருக்கும் நல் கிராக்கி உள்ளது. அதேபோல கூட்டங்களில் சீரியல் செட், ஒளி ஒலி அமைப்பாளர்கள் ஆகியோருக்கும் செம கிராக்கியாம்.

மேடை- பந்தல் மூலம் ரூ. 90 கோடி

மேடை- பந்தல் மூலம் ரூ. 90 கோடி

தமிழகம் முழவதும் மேடை அமைப்பு, பந்தல் போடுவது போன்றவற்றின் மூலம் மட்டும் ரூ. 90 கோடி வரை வருமானம் நடக்கிறதாம்.

நல்ல டிரைவரா நீங்க...

நல்ல டிரைவரா நீங்க...

எல்லோரையும் விட டிரைவர்களுக்குத்தான் பெரும் கிராக்கியாக உள்ளதாம். வேன், கார், ஜீப் போன்ற பிரசார வாகனங்களை செலுத்த டிரைவர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறர்கள்.

வேனுக்கும் கிராக்கி

வேனுக்கும் கிராக்கி

அதேபோல டூரிஸ்டர் வேன்களுக்கு செம கிராக்கி உள்ளது. பிரசாரக் கூட்டங்களுக்கு ஆட்களைக் கூட்டிச் செல்வது, பிரசாரங்களுக்குப் போவது என சகல விதமான தேர்தல் பணிகளுக்காக வேன்களை பலரும் வாடகைக்கு அமர்த்துவதால் வேன்கள் கிடைக்காத நிலையும் காணப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தால் காசுக்கு கிளிக் கிளிக்

தேர்தல் ஆணையத்தால் காசுக்கு கிளிக் கிளிக்

இதுதவிர தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் பிரசாரக் கூட்டங்கள் உள்ளிட்ட கட்சியினர் சுயேச்சைகளின் தேர்தல் பணிகளைக் கண்காணிக்க வீடியோ பதிவுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் வீடியோ கேமராக்கள், வீடியோகிராபர்களுக்கு கிராக்கி ஆகியுள்ளது. கிட்டத்தட்ட 4000 பேருக்கு இப்படி திடீர் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.

வேட்பாளர்களின் ஆடிட்டர்கள்

வேட்பாளர்களின் ஆடிட்டர்கள்

அதேபோல வேட்பு மனுவோடு தாக்கல் செய்யப்படும் சொத்துக் கணக்கு, பின்னர் பிரசார செலவுக் கணக்கு உள்ளிட்டவற்றை தயாரித்து, சரி பார்த்துக் கொடுக்கும் பணிக்காக பிகாம் படித்தர்கள், சிஏ படித்வர்கள் என அவர்களுக்கும் நல்ல வேலை கிடைத்துள்ளதாம்.

எழுதிக் கொடுத்தாக் கூட காசு தர்றாங்கய்யா...

எழுதிக் கொடுத்தாக் கூட காசு தர்றாங்கய்யா...

இதை விட முக்கியமாக வேட்பாளர்களுக்கு பிரசாரத்தின்போது பேசுவதற்கு பாயிண்ட்ஸ் எடுத்துத் தருவதற்கும், எழுதித் தருவதற்கும் கூட ஆட்கள் தேவைப்படுகிறார்களாம். அதற்கும் பல பட்டதாரிகள், எதுகை மோனையுடன் எழுதக் கூடியவர்களைப் பிடித்துப் போடுகிறார்கள்.

எங்க பார்த்தாலும் காசு.. காசு.. காசு

எங்க பார்த்தாலும் காசு.. காசு.. காசு

இப்படி தேர்தலையொட்டி அது சார்ந்து பல தொழில்களுக்கும், பல நபர்களுக்கும் வேலைவாய்ப்பும், வருமானமும் கிடைத்து வருகிறதாம்.

English summary
Election has brought big smiles to many due to the sudden employment to many persons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X