For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் முடிவுகள்: தமிழகத்தில் சிறுபான்மையின தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

|

நெல்லை: தமிழகத்தில் தேர்தல் முடிவுகளை முன்னிட்டு முக்கிய தலைவர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளிலும் கடந்த மாதம் 24ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் அதிமுக 37 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. புதுச்சேரி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகின்றது.

ஆனால் தேசிய அளவில் பாஜக பெரும்பான்மை பெற்றுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவேண்டும் என உளவுத்துறை தமிழக அரசுக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளது.

இதனையடுத்து முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக அதிக கலவர பூமியாக அறிப்படும் நெல்லை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் மேலப்பாளையம் நகர தமுமுக செயலாளர் பெஸ்ட் ரசூல் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

English summary
Police protection has been given to minority leaders in Tamil Nadu ahead of the announcement of the lok sabha election results.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X