ஹோட்டலுக்கு போனால் ஜிஎஸ்டி.. வீட்டில் சமைக்கலாம்னா காஸ் மானியம் ரத்து.. மக்கள் குமுறல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கேஸ் மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது தொடர்பான கமெண்டுகள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன.

இந்தியா முழுவதும் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் கேஸ் மானியம் ரத்து என்று மத்தியில் ஆளும் மோடி அரசு அறிவித்துள்ளது.

முதலில் மானியத்தை வங்கியில் நேரடியாகப் போடுகிறேன் என்று மக்களை ஆசை காட்டிய மோடி, தற்போது மானியத்திற்கு முற்றிலுமாக வேட்டு வைத்துள்ளார். இது பற்றிய சில பேஸ்புக் கமெண்டுகள்..

கேஸ் மானியம் ரத்து போ..

கேஸ் மானியம் வேணுமா... வங்கி கணக்கை ஆரம்பி....
கேஸ் மானியம் வேணுமா... ஆதார் கார்ட்டு எடு...
கேஸ் மானியம் வேணுமா... ஆதார் கார்ட வங்கி கணக்கோட இணை...
சொன்னது எல்லாம் செஞ்சிட்டயா.... கேஸ் மானியம் ரத்து போ!!!

தலைமறைவு வாழ்க்கை

ரேஷன் கடை கிடையாது
கேஸ் மானியம் கிடையாது
இப்படியே போனால் இவர்கள் தமிழ்நாட்டில் தலைமறைவு வாழ்க்கை தான் வாழனும் போல..

புதிய இந்தியா பொறந்துரும்

கேஸ் மானியம் ரத்தாம்...
வேணும்னா பாருங்களேன் இன்னும் கொஞ்சம் நாளுல இன்னொரு "புதிய இந்தியா" பொறந்துரும்..!!!

சுடச்சுடப் பொட்டலம்

வீட்ல சமைக்கலாம்னா கேஸ் மானியம் ரத்து, ஹோட்டல் போகலாம்னா GST..
போர் வந்தாலாவது ஐநா சபை ஹெலிகாப்டர்லருந்து சுட சுட சாப்பாடு பொட்டலம் போடுவான்.. 😒

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens comment on Facebook against Elimination of LPG subsidy.
Please Wait while comments are loading...