For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆங்கிலேயர் கால பங்களா புதுப்பிப்பு - வனத்துறையினர் உற்சாகம்.. களக்காட்டில்!

Google Oneindia Tamil News

நெல்லை: களக்காடு செங்கல்தேரி மலையில் உள்ள எஸ்டேட் பங்களா பல ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் கடல் மட்டத்தில் இருந்து 2000 மீட்டர் உயரம் கொண்ட செங்கல்தேரி உள்ளது. இங்கு நாம் சென்றதுமே உடலை வருடும் மெல்லிய காறறு உள்ளத்திற்கு உற்சாகத்தை கெ்ாடுக்கும்.

திரும்பிய பக்கமெல்லாம் பச்சையாக காட்சியளிக்கும். மரக்கூட்டங்களின் அடர்த்தி அதன் ஊடே வெள்ளியை உருக்கி விட்டபோது போல் வரும் நீரோடை, வட்டமிடும் பறவைகள், ரீங்காரமிடும் வண்டுகள் என செங்கல்தேரியின் சிறப்புகள் பல உள்ளன.

புலிகளின் வசிப்பிடமாக திகழும் செங்கல்தேரியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அழகு பங்களா உள்ளது. முன்பு செங்கல்தேரி மலையில் பல ஏக்கர் நில்த்தில் ஏலக்காய் எஸ்டேட் இருந்தது. இந்த எஸ்டேட்டில் பணியாளர் குடியிருப்பும், பங்களாவும் இருந்தன.

கடந்த 1988 ஆம் தேதி வருடம் களக்காடு புலிகள் சரணாயலமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எஸ்டேட் மூடப்பட்டு அங்கிருந்த பணியாளர் வெளியேற்றப்பட்டனர்.

அதன் பின் எஸ்டேட் குடியிருப்பு அழிந்த பின் அங்கிருந்த பங்களா மட்டும் காட்சி பொருளாக இருந்தது. நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாததால் பங்களா கதவு, ஜன்னல் உள்பட பல உடைந்து விட்டன. ஆனால் பங்களா கற்களால் கட்டப்பட்டதால் அதற்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

இதனை சுற்றி பழத்தோட்டங்கள் உள்ளன. இந்த நிலையில் பாழடைந்த செங்கல்தேரி பங்களாவை புதுப்பிக்க வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. இதன் ஒருகட்டமாக அங்கு சூரிய ஒளியில் இயங்கும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.

பின்னர் உடைந்த கதவு , ஜன்னல்களை எடுத்து விட்டு புதிதாக பொருத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இது முடிந்தவுடன் அங்கு வேட்டை தடுப்பு காவலர்கள் தங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வன அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
Nellai district bungalow renewed by the forest department for the forest police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X