கமல் விசிட் எதிரொலி.. எண்ணூர் துறைமுகப் பகுதியில் கழிவுகளை அகற்ற களமிறங்கும் கலெக்டர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அரசியல் பேச்சுகளுக்கு பிறகு முதல் முறையாக களத்தில் குதித்த கமல்!- வீடியோ

  சென்னை: எண்ணூர் துறைமுக கழிமுகப் பகுதிகளில் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து நடிகர் கமல் பார்வையிட்டதை அடுத்து அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

  கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் வடசென்னைக்கு ஆபத்து என்று நடிகர் கமல் ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

  Ennore encroachments will be removed, says Collector Sundaravalli

  இதையடுத்து நடிகர் கமல் இன்று அதிகாலை 5 மணிக்கு எண்ணூர் துறைமுக கழிமுகப் பகுதிக்கு சென்று அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகளை பார்வையிட்டார். பின்னர் மக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார்.

  கமலின் துறைமுக விசிட்டை தொடர்ந்து திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லி விழித்தெழுந்து அவசரமாக கழிவுகளைக் கொட்ட எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எண்ணூர் துறைமுக கழிமுகப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அகற்றப்படும் என்றும் 200-க்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ளம் பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக கண்டறிப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  பரவாயில்லையே, கமல்ஹாசன் எபக்ட் முழு நேர அரசியலுக்கு வருவதற்கு முன்பே அதிரடியாக இருக்கிறது!

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Tiruvallur Collector Sundaravalli says that she will remove all encrochments in Ennore if she found anything.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற