அதிமுகவில் இருந்து தினகரன் ஆதரவாளர்கள் 43 பேர் கூண்டோடு நீக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தினகரன் வெற்றி..ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் என்ன சொல்கிறார்கள்?- வீடியோ

  சென்னை : அதிமுகவிலிருந்து தினகரன் ஆதரவாளர்கள் 43 பேரை ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் நீக்கி உத்தரவிட்டனர்.

  ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் அதிர்ச்சி அடைந்தன.

  இந்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட ஸ்லீப்பர் செல்கள் பேட்டரி போட்ட மாதிரி எழுந்து நிற்பர் என்று தினகரன் கூறியிருந்தார்.

  கட்சி அலுவலகத்தில் ஆலோசனை

  கட்சி அலுவலகத்தில் ஆலோசனை

  தினகரனை சமாளிப்பது குறித்து முடிவெடுக்க கடந்த 25-ஆம் தேதி அதிமுக அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளில் முதல் கட்டமாக தினகரனுக்கு ஆதரவாக உள்ள 6 மாவட்ட செயலாளர்களான தங்கதமிழ் செல்வன், வெற்றிவேல், ரங்கசாமி, விபி கலைராஜன், பார்த்திபன் , முத்தையா ஆகியோர் நீக்கப்பட்டனர்.

  சிஆர் சரஸ்வதி உள்ளிட்டோர் நீக்கம்

  சிஆர் சரஸ்வதி உள்ளிட்டோர் நீக்கம்

  இதையடுத்து பெங்களூர் புகழேந்தி, நாஞ்சில் சம்பத், சிஆர் சரஸ்வதி உள்ளிட்டோரும் அவரவர் பதவியிலிருந்தும் அதிமுகவிலிருந்தும் நீக்கப்பட்டனர். இதை சட்டரீதியாக சந்தித்து கொள்வதாக சம்பந்தப்பட்டவர்கள் கூறினர்.

  ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிரடி

  ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிரடி

  இந்நிலையில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 45 பேர் இன்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் வெளியிட்டுள்ளனர்.

  முன்னாள் எம்எல்ஏவும் நீக்கம்

  முன்னாள் எம்எல்ஏவும் நீக்கம்

  மதுரை, திருச்சி, தஞ்சை, வேலூர், தருமபுரி, பெரம்பலூர், தேனி, விழுப்புரம் உட்பட பல்வேறு மாவட்ட நிர்வாகிகளை அதிரடியாக நீக்கியுள்ளனர். அதிமுக பொதுக்குழு உறுப்பினர் மாஜி எம்.எல்.ஏ. சாமியும் நீக்கப்பட்டுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  EPS and OPS sacked 43 of TTV Dinakaran supporters from ADMK. They sacked the activists from Madurai, Trichy, Theni etc.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற