For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனியார் பால் நிறுவனங்களிடம் லஞ்சம் பெற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முயற்சி- ஈவிகேஎஸ் இளங்கோவன் பொளேர்

தனியார் பால் நிறுவனங்களிடம் இருந்து லஞ்சம் பெறுவதற்காகவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் என்று தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டினார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

தஞ்சை: தனியார் பால் நிறுவனங்களிடம் இருந்து பணம் பெறுவதற்காகவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாலில் ரசாயனம் கலந்திருப்பதாக குற்றம்சாட்டுகிறார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.

தனியார் பால் நிறுவனங்கள் தயிரையே பாலாக்குகின்றன என்று கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது தெரிவித்தார். தனியார் நிறுவனங்கள் பாலில் ரசாயனம் கலப்பதால் அதை குழந்தைகளுக்கு கொடுப்பதால் புற்றுநோய் ஏற்படும். தனியார் பால் நிறுவனங்கள் தாங்கள் பாலில் கலப்படம் செய்யவில்லை என நிரூபிக்க தயாரா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

 ஆய்வக சோதனை

ஆய்வக சோதனை

மேலும் தனியார் நிறுவன பால் மாதிரிகள் மத்திய ஆய்வகத்துக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. ரசாயனம் கலப்படம் இல்லை என்று தனியார் பால் நிறுவனங்கள் நிரூபித்தால் தான் தூக்கில்கூட தொடங்க தயார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சவால் விடுத்தார்.

 ஆவின் பால் தரமானதா?

ஆவின் பால் தரமானதா?

இதுகுறித்து தஞ்சையில் செய்தியாளர்களுக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ஆவின் பால் தரமானதா என தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்.

 பணம் பெற முயற்சி

பணம் பெற முயற்சி

தனியார் பால் நிறுவனங்களிடம் இருந்து பணத்தை பெறுவதற்காகவே அமைச்சர் இதுபோன்ற குற்றச்சாட்டை தெரிவிக்கிறார் என்பது என் கருத்து. இறைச்சிக்காக மாடு விற்பனை தடை கண்டிக்கத்தக்கது.

 சர்வாதிகாரிகள் கூட...

சர்வாதிகாரிகள் கூட...

தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடுகிறது. இதுபோன்று சர்வாதிகார மன்னர்கள்கூட தனிமனித சுதந்திரத்தை பறித்தது கிடையாது. மத்திய அரசின் முடிவை திரும்ப பெற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

English summary
EVKS Ilangovan says that Aavin milk also be reviewed. Minister Rajendra Balaji's allegations seems that to get bribe from private milk companies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X