தீபா வீட்டுக்குள் நுழைந்த டுபாக்கூர் ஐடி அதிகாரி போலீசில் சரண்- நாடகமாடியது ஏன்? பரபர வாக்குமூலம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மாதவன் தான் டிராமா செய்ய சொன்னார்-டுபாக்கூர் ஐடி அதிகாரி- வீடியோ

  சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டுக்குள் நுழைந்ததாக கூறப்படும் போலி வருமான வரித்துறை அதிகாரி மித்தேஷ்குமார் என்ற பிரபாகரன் போலீசில் சரணடைந்துள்ளார். தீபா கணவர் மாதவனின் யோசனைப்படியே தாம் போலி அதிகாரியாக நடித்ததாக பிரபாகரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

  தீபாவின் தியாகராய நகர் வீட்டுக்குள் சில நாட்களுக்கு முன்னர் வருமான வரித்துறை அதிகாரி என்ற பெயரில் ஒருவர் உள்ளே நுழைந்தார். தம்மை மித்தேஷ்குமார் என கூறிக் கொண்ட அந்த நபர் சர்ச் வாரண்ட் ஒன்றையும் தீபா வீட்டில் காண்பித்தார்.

  Fake IT official surrender in Police

  இது குறித்து சந்தேகமடைந்த தீபா வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் மித்தேஷ்குமாரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே தீபா வீட்டின் சுவர் ஏறி குதித்து மித்தேஷ்குமார் தப்பி ஓடினார்.

  அவரை பிடிக்க போலீசார் தனிப்படைகள் அமைத்தனர். இந்த நிலையில் போலி அதிகாரி மித்தேஷ்குமார் சென்னை போலீசில் சரணடைந்துள்ளார். அவர் போலீசிடம் கொடுத்த வாக்குமூலத்தில், புதுவையை சேர்ந்த தாம் உணவகம் நடத்தி வருகிறேன். தீபா கணவர் மாதவன் உணவகத்துக்கு வந்த போது சினிமா எடுக்க இருப்பதாக கூறினார்.

  அந்த சினிமாவில் தமக்கும் வாய்ப்பு தருகிறேன் எனவும் மாதவன் உறுதியளித்தார். மாதவன் கூறியதன் அடிப்படையில் தாம் போலி வருமான வரித்துறை அதிகாரியாக தீபா வீட்டுக்குள் நுழைந்தேன் என் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

  இதையடுத்து தீபாவின் கணவர் மாதவனிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்தனர். ஆனால் மாதவன் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  A Fake IT official who was enterd to Deepa, niece of former Tamil Nadu chief minister the late Jayalalithaa house surrenderd in Police.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற