5 தமிழக மீனவர்கள் வருவதில் தாமதம்: காத்திருக்கும் உறவினர்கள் அப்செட்!
திருச்சி: தூக்கு தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் இலங்கையில் இருந்து தமிழகம் வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் உறவினர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
போதை பொருள் கடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு இலங்கை நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களுக்கு நேற்று இலங்கை அதிபர் ராஜக்சே பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். இதையடுத்து, இன்று காலை 8.30 மணிக்கு அவர்கள் அனைவரும் திருச்சிக்கு விமானம் மூலம் அழைத்து வரப்படுவார்கள் என்று கூறப்பட்டது.

அதனால், அவர்களை வரவேற்க ராமேஸ்வரத்திலிருந்து எமர்சன், அகஸ்டஸ், வில்சன், லாங்லெட், பிரசாந்த் உள்ளிட்டோரின் உறவினர்கள், மனைவிகள், குழந்தைகள் இன்று அதிகாலை முதலே திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
அவர்களுடன் பா.ஜ.க. மாநில செயலாளர் சுப்பிரமணியன், மனித நேய மக்கள் கட்சியின் நிறுவன தலைவரும் எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா என முக்கிய பிரமுகர்கள் தங்கள் கட்சி தொண்டர்களுடன் குவிந்திருந்தனர்.
இதனிடையே பாஸ்போர்ட் தொடர்பான பணிகள் எல்லாம் முறைப்படி முடிவடைந்து 5 மீனவர்களும் இன்று மதியம் 3 மணிக்கு இலங்கையிலிருந்து வரும் ஏர் இந்தியா விமானத்தில் அழைத்து வரப்பட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது மீனவர்கள் அனைவரும் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடியை மீனவர்கள் 5 பேரும் இன்று மாலையில் சந்திக்கின்றனர். இதனையடுத்து அவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள் என கூறப்பட்டது. இதனையடுத்து திருச்சி விமானநிலையத்தில் காத்திருந்த உறவினர்கள் ஏமாற்றமடைந்தனர். எப்படியும் இன்று வந்துவிடுவதாக தெரிவித்த காரணத்தால் விடிய விடிய தூங்காமல் காத்திருந்து அதிகாலையில் திருச்சி வந்ததாகவும், தற்போது ஏமாற்றமடைந்துள்ளதாகவும் மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications