ஏன் மாமா இப்படி காலையிலேயே.. கேள்வி கேட்டதால் மாமனார் விபரீதம்.. மருமகளும் விஷம் குடித்து சாவு
மாமனாரும் மருமகளும் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர்
ஆரணி: "ஏன் மாமா இப்படி காலங்காத்தாலேயே குடிச்சிட்டு வர்றீங்க" என்று மருமகள் நாக்கை பிடுங்கி கொண்டு கேள்வி கேட்கவும் மாமனார் தற்கொலை செய்து கொண்டார்.. இதனால் போலீஸ் விசாரணைக்கு பயந்துபோன மருமகளும் விஷத்தை குடித்து உயிரை மாய்த்து கொண்டார்!
ஆரணியை அடுத்துள்ள கிராமம் அணியாலை... இங்கு வசித்து வந்தவர் வேலு.. 65 வயது விவசாயி.. இவருக்கு குமார் என்ற மகனும், சிவசங்கரி, மைதிலி என்ற 2 மகள்களும் உள்ளனர்.

வேலுவுக்கு பழப்பழக்கம் இருந்துள்ளது.. இதனால் தினமும் ராத்திரி ஆனால், தண்ணி அடித்துவிட்டுதான் வீட்டுக்கு வந்துள்ளார்.. ஆனால், நேற்று விடிகாலையிலேயே தண்ணி அடித்துள்ளார்.. வீட்டுக்குள் நுழையும்போதே கோணல்மாணலாக நடந்து வருவதை கண்டு, குமாரின் மனைவி கலைவாணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதனால் மாமனாரிடம் சென்று, "காலங்காத்தாலயே இப்படி குடிச்சிட்டு வரணுமா.. ஊருக்கு பெரிய மனுஷனா இருந்துட்டு, இப்படி குடிச்சிட்டு வர்றீங்களே, நல்லாவா இருக்கு?" என்று கேள்வி கேட்டுள்ளார். இது மாமனாருக்கு பெருத்த அவமானமாக போய்விட்டது.. அதனால், வீட்டில் விவசாயத்துக்கு பயன்படுத்தும் விஷத்தை எடுத்து குடித்துவிட்டார்.. இதை பார்த்து பதறிய குடும்பத்தினர் உடனடியாக வேலுவை ஆரணி ஆஸ்பத்திரியிலும், மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்த்தும், பலனில்லை.. வேலு இறந்துவிட்டார்.
இதனால் மருமகள் கலைவாணி பயந்து நடுங்கினார்.. மாமனார் இறந்ததற்கு தன்னை எப்படியும் போலீசார் அழைத்து விசாரிப்பார்கள் என்று நினைத்து, அவரும் விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். அவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றும், கலைவாணி பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே வீட்டில் மாமனாரும் - மருமகளும் விஷம் குடித்து இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications