கணவனின் கள்ளத்தொடர்பை கண்டுபிடித்த மனைவி.. கடும் சண்டை.. அவசரமாக சென்னையில் தரையிறங்கிய விமானம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கணவனின் கள்ளத்தொடர்பை கண்டுபிடித்த மனைவி.. அவசரமாக தரையிறங்கிய விமானம்

  சென்னை: நேற்று கத்தாரின் தோஹாவில் இருந்து இந்தோனேஷியா சென்று கொண்டிருந்த கத்தார் ஏர்வேஸ் விமானம் கணவன் மனைவி சண்டையால் பாதியில் தரை இறக்கப்பட்டது. அந்த விமானம் நேற்று இந்தோனீசியா செல்லும் வழியில் பாதியில் சென்னையில் தரையிறக்கப்பட்டது இருக்கிறது.

  அந்த விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் தன் கணவனின் கள்ளத் தொடர்பை கண்டுபிடித்து இருக்கிறார். இதன் காரணமாக விமான அதிகாரிகளுடன் சண்டை போட்டு விமானத்தை பாதி வழியில் நிறுத்தி இருக்கிறார்.

  மேலும் அவர் மிகவும் அதிக அளவில் போதையில் இருந்ததாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.

  கத்தார் விமானம்

  கத்தார் விமானம்

  நேற்று கத்தார் ஏர்வேஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று தோஹாவில் இருந்து இந்தோனேஷியாவுக்கு சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணித்த ஒரு பெண்மணி தன்னுடைய கணவன் தூங்கியதும் சாதாரணமாக அவரது போனை எடுத்து பார்த்து இருக்கிறார். அவரது போனின் லாக்கை ஓப்பன் செய்து பார்த்தவர் தன கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது கண்டு அதிர்ந்தார். அவர் பல காலமாக நிறைய பெண்களுடன் தொடர்பில் இருந்து இருக்கிறார்.

  சண்டை போட்ட மனைவி

  சண்டை போட்ட மனைவி

  இந்த நிலையில் அதை பார்த்ததும் அதிர்ந்த அந்த பெண் உடனடியாக கணவனை எழுப்பி அவருடன் சண்டை போட்டு இருக்கிறார். அவர்கள் சண்டையின் காரணமாக அந்த விமானத்தில் இருந்த அனைவரும் தூக்கத்தில் இருந்து எழுந்து இருக்கின்றனர். மேலும் அந்த பெண் குடி போதையில் வேறு அப்போது இருந்து இருக்கிறார்.

  அதிகாரிகளுடன் சண்டை

  அதிகாரிகளுடன் சண்டை

  அந்த சண்டையை தடுக்க வந்த விமான பணியாளர்களையும் அவர் திட்டி இருக்கிறார். இதனால் அங்கு பெரிய குழப்பம் உருவாகி இருக்கிறது. இதையடுத்து அவர் விமானத்தை உடனே தரை இறக்கவும் கூறி இருக்கிறார். அவர் பயணிகளுக்கு மிகவும் தொந்தரவாக இருக்கிறார் என்பதால் விமானத்தை தரை இறக்கும் முடிவை விமானிகள் எடுத்தனர்.

  சென்னை கொண்டு வரப்பட்டது

  சென்னை கொண்டு வரப்பட்டது

  இதையடுத்து அந்த விமானம் சென்னையில் தரையிறக்கப்பட்டது. மேலும் அந்த பெண்ணுடன் சேர்த்து அவரது கணவரும் தரையிறக்கப்பட்டார். அவர்கள் மீது எந்த விதமான வழக்கும் பதியபபடவில்லை. மேலும் அவர்களின் பெயரை வெளியிட விமான அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  The flight headed to Indonesia was diverted and to Chennai after the Iranian woman created a ruckus mid-air over her husbands second affair. Security agencies said she was drunk.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற