ஒகேனக்கல்லில் வெள்ளியை வார்த்து கொட்டியது போல் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்.. கண்டுகளிக்க மக்கள் ஆர்வம்!
ஒகேனக்கல்லில் ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளப்பெருக்கை மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.
Recommended Video

கிருஷ்ணகிரி: ஒகேனக்கல்லில் ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளப்பெருக்கை மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து கர்நாடகாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் மழையால் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது. கபினி அணையில் இருந்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு
அந்த தண்ணீர் ஒகேனக்கல்லை வந்தடைந்துள்ளது. இதனால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்
இதன்காரணமாக ஒகேனக்கல் அருவியில் ஒரே நாளில் 50க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சிகள் உருவாகியிருப்பது போல் உள்ளது. இந்த கண்கொள்ளா காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் சுற்றுவட்டார கிராம மக்களும் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.

5வது நாளாக தடை
2013ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தால் ஒகேனக்கல்லில் பரிசல்களை இயக்க 5வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை
மேலும் கரையோர மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு குழுவினர் ஒகேனக்கல் பகுதியில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications