For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இரவு முழுக்க பெய்த மழையால் கடையநல்லூரில் வெள்ளம்

கடையநல்லூரில் இரவு முழுவதும் பெய்த தொடர் மழையால் பாப்பான்கால், சீவலான் கால்வாய்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லையில் இருக்கும் கடையநல்லூரில் இரவு முழுவதும் பெய்த தொடர் மழையால் பாப்பான்கால், சீவலான் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மதினாநகர் குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. கால்வாய் ஓரம் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

நேற்று இரவு கடையநல்லூர் கருப்பாநதி அணைக்கட்டு பகுதியில் ஓர் ஆண்டில் பெய்யக்கூடிய சரசரி மழை நள்ளிரவில் நான்கு மணி நேரத்தில் 198 மி.மீ மழை பெய்தது. இதனால் கருப்பாநதி அணைக்கு வரும் 1800 கனஅடி நீரை அப்படியே வெளியேற்றினர்.

Flood in Kadayanallur due to heavy rain

இதனால் கடையநல்லூர் பாப்பான் கால்வாய், சீவலான்கால்வாய்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கரையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பெரியாற்றில் சலவைக்காக வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான துணிமனிகள், புடவைகளை வெள்ளம் அடித்து சென்றது.

கடையநல்லூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை கடையநல்லூர் தாசில்தார் மாரியப்பன் பார்வையிட்டார்.

English summary
Flood in Kadayanallur due to heavy rain. Many people living near by water resources got affected by this flood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X